கொரோனா தொற்றுத் துவங்கிய காலகட்டத்தில் இருந்து அன்றாட மக்களுக்கு மட்டுமல்ல, பில்லியன் டாலர் நிறுவனங்களுக்கும் கூட நிதி ரீதியாக நிலையற்றதாக உள்ளது.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியான தடுமாற்றம், சந்தை மதிப்பீட்டில் முன்னணி இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் கூடப் பல நூறு பில்லியன் டாலர் முதல் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தை மதிப்பீட்டில் பதிவு செய்துள்ளது.
ஆனாலும் 2022 இல், பல நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பல இடத்தில் வர்த்தகத்தைக் காப்பாற்றவும், சில இடத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடந்தன.
போராட்டம் நிறைந்த ஆண்டு
2022 ஆம் ஆண்டுப் போராட்டம் நிறைந்த ஆண்டாக இருந்த காரணத்தால் mergers and acquisitions மூலம் பல நிறுவனங்கள் பெரும் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது. சில இணைப்புகள் தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக நடந்தன, சில தோல்வியடைந்த நிறுவனத்திற்குப் பிணை எடுப்பதற்காக நடந்தன.
இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்
ஆனால் பெரும்பாலான இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் லாபத்தையும், வர்த்தகத்தை அதிகரிப்பதற்காகவும் நடந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
டாப் 10
இந்த நிலையில் 2022 இன் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான டாப் 10 இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்களை இப்போது பார்ப்போம். நீங்கள் முக்கியமானதாக நினைக்கும் திட்டம் எது மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
எலான் மஸ்க் - டிவிட்டர்
2022 ஆம் ஆண்டு முழுவதும் மக்களைப் பரபரப்பாகவே வைத்திருந்த ஒரு ஒப்பந்தம் தான் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது. 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் துவங்கி இன்று வரையில் டிவிட்டரில் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.
டாடா குரூப் - ஏர் ஏசியா
மத்திய அரசு சொந்தமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் பல வருட போராட்டத்திற்குப் பின்பு மத்திய அரசு ஏர் இந்தியா-வை டாடா குரூப்-க்கு விற்பனை செய்துள்ளது.
தற்போது டாடா குழுமத்தில் இருக்கும் விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா உடன் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது டாடா குழுமம்.
அதானி குரூப் - என்டிடிவி
ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் கெளதம் அதானி, கடந்த சில ஆண்டுகளில் பல நிறுவனங்களைக் கைப்பற்றினாலும் அதில் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்று NDTV. இந்த ஒப்பந்தம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விமர்சிக்கப்பட்டது.
PVR - INOX இணைப்பு
இந்தியாவின் இரண்டு முன்னணி சினிமா தியேட்டர் நிறுவனங்களான, PVR மற்றும் INOX 2022 ஆம் ஆண்டில் தனது வர்த்தக ஆதிக்கத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் ஒன்றிணைந்து. இந்த இணைப்பு மூலம் இந்தியாவில் மட்டும் சுமார் 1500 திரைகள் உடன் நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
HDFC - HDFC வங்கி இணைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான HDFC லிமிடெட் மற்றும் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி ஆகியவை 2022 இல் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த இணைப்பு மூலம் 40 பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க உள்ளது கூட்டணி.
இதர முக்கிய இணைப்புகள்
அதானி குரூப் - அம்புஜா சிமெண்ட்ஸ்
மைக்ரோசாப்ட் - Activision Blizzard
மோஜ் - MX டாகா டக்
Broadcom - VMWare
சோமேட்டோ - Blinkit
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications