சென்னை நகரில் சொத்து வரி செலுத்தாத முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பிடித்து இருப்பவர்கள் ரூ. 7 லட்சம் துவங்கி அதிகபட்சம் ரூ. 10.8 கோடி வரையிலான தொகையை மாநகராட்சிக்கு சொத்து வரியாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த பட்டியலில் நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் விற்பனையக கட்டிடங்களும் இடம்பிடித்து இருக்கிறது.
சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி பாக்கி மட்டும் ரூ. 1.4 கோடி ஆகும்.
ஆர்ஆர் இன்ஃபோ பார்க்
இந்த பட்டியலில் மனூர்பேட்டையை சேர்ந்த ஆர்ஆர் இன்ஃபோ பார்க் பிரைவேட் லிமிடெட் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 10 கோடியே 84 லட்சம் வரை சொத்து வரி செலுத்த வேண்டியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை
இதேபோன்று ஒ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 47.8 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. டி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ரூ. 49 லட்சம் சொத்து வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.
இதுதவிர உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை கடை ரூ. 19.3 லட்சமும், வேளச்சேரியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை கடை ரூ. 18.49 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும். மாநகராட்சி பட்டியலின் படி சொத்து வரி செலுத்த வேண்டிய நபரின் பெயர் பல்லக்கதுரை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆந்திர மகிலா சபா
ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிலா சபா ரூ. 17.3 லட்சமும், டி நகரில் உள்ள ஆந்திரா சமூக மற்றும் கலாசார கூட்டமைப்பு ரூ. 15.8 லட்சம் வரை சொத்து வரி செலுத்த வேண்டிய பட்டியலில் உள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரி ரூ. 1 கோடியே 27 லட்சம் சொத்துவரி செலுத்தாமல் இருப்பதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சிடிஎஸ் (CeeDeeYes) ஸ்டாண்டர்டு டவர்ஸ் சார்பில் மாநகராட்சிக்கு ரூ. 98.75 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும்.
அபராத தொகை
இதுதவிர பல்வேறு வழக்குகளில் அபராத தொகையை செலுத்தாமல் இருக்கும் 100 பேரின் பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பிடித்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 8 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது.
முக்கிய அமைப்புகள்
இப்பட்டியலில் ஸ்ரீ ராமசந்திரா கல்வி எட்யுகேஷனல் மற்றும் ஹெல்த் டிரஸ்ட், மெட்ராஸ் ரேஸ் கிளப், ஸ்பென்சர் மற்றும் கம்பெனி லிமிடெட், சிடாடைன்ஸ் ஒ.எம்.ஆர். அபார்ட் ஓட்டல்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் பட்டியல்
ஒ.எம்.ஆர்.-இல் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை கடை மாநகராட்சிக்கு ரூ. 47.8 லட்சம், டி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடை ரூ. 49 லட்சம், உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை கடை ரூ. 19.3 லட்சம், வேளச்சேரியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை கடை ரூ. 18.49 லட்சம் பாக்கி வைத்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications