பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிஎப் மற்றும் விபிஎப் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விதிப்பின் படி கணக்கிடப்படும் என அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது பிஎப் முதலீட்டில் மீது அதிகப்படியாக முதலீடு செய்வது யார் என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
வரிச் சலுகை
பிஎப் முதலீட்டுச் சேவை ஊழியர்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டு, நடுத்தர மக்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்பதற்காக அதன் மீதான வருமானத்திற்குச் சலுகை அளிக்கப்பட்டு. இந்நிலையில் பிஎப் அமைப்பிலிருந்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
சாமானிய ஊழியர்கள்
இந்தப் பிஎப் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக லாபம் அடைவது சாமானிய ஊழியர்கள் அல்ல என்றும் அதிகச் சொத்து மதிப்புக் கொண்ட தனிநபர்கள் தான் இதன் மூலம் அதிகளவில் பயன் அடைகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதன் படி ஒரே பிஎப் கணக்கில் சுமார் 103 கோடி ரூபாய் உள்ளதாகப் பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிஎப் கணக்குள்
இதைத் தொடர்ந்து டாப் 5 கணக்கில் 103 கோடி ரூபாயை தொடர்ந்து, 85.6 கோடி ரூபாய், 85 கோடி ரூபாய், 72.8 கோடி ரூபாய், 47 கோடி ரூபாய் என வரி சலுகைக்காக முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
டாப் 100 கணக்குகள்
இதன் மூலம் டாப் 20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாயும், டாப் 100 கணக்குகளில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உள்ளது. இதன் மூலம் HNI பிரிவு கணக்காளர்கள் மட்டும் சராசரியாக 5.9 கோடி ரூபாய் அளவிலான நிதியை பிஎப் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 50.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பிஎப் கணக்குகளை
இந்தியாவில் மொத்தமாக 4.5 கோடி ஊழியர்கள் பிஎப் கணக்குகளை வைத்துள்ளனர், இந்தக் கணக்குகளில் மொத்தம் 62,500 கோடி ரூபாய் அளவிலான நிதி உள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி டாப் 100 கணக்குகளில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உள்ளது. இந்த நிலையில் பிஎப் முதலீட்டின் மீது வரி சலுகை குறைத்துள்ளது சரியா..? தவறா..? இந்தத் பிஎப் முதலீட்டு வரி சலுகையால் யார் அதிகம் லாபம் அடைகிறார்கள் என்பதைக் கமெண்ட் பதிவிடும் இடத்தில் சொல்லுங்கள்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications