H-1B visa: அலேக்கா தூக்கும் 3 நிறுவனங்கள்.. இந்திய நிறுவனங்கள் ஆதிக்கமா? உண்மை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெக் ஊழியர்களுக்கு வாழ்நாள் கனவாக இருக்கும் ஹெச்1பி விசா அதிகம் பெறும் நிறுவனம் எது என்ற ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

காலம் காலமாக இந்திய நிறுவனங்கள் தான் ஹெச்1பி விசாக்களை அதிகம் பெற்று வருகிறது எனக் கூறப்பட்டாலும் சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சைலென்ட் ஆக அதிக விசா-க்களைப் பெற்றுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் டாப் 3 இடத்தைப் பிடித்த நிறுவனங்கள் எது தெரியுமா..?

இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..! இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

அமெரிக்க விசா அளிக்கும் USCIS அமைப்பின் தரவுகளை அடிப்படையாக வைத்து National Foundation for American Policy என்ற அமைப்பு செய்த ஆய்வில், அமெரிக்க நிறுவனமான அமேசான் தான் அதிகளவிலான ஹெச்1பி விசா பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 6,396 ஹெச்1பி விசாக்களைப் பெற்றுள்ளது. 2020, 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான புதிய ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ், டிசிஎஸ்

இன்போசிஸ், டிசிஎஸ்

அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்போசிஸ் 3,151 விசாக்களையும், டிசிஎஸ் 2,725 விசாக்களையும் பெற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து காக்னிசென்ட் 2,521 விசாக்களைப் பெற்றுள்ளது, கூகுள் 1,562 விசாக்களைப் பெற்றுள்ளது, மெட்டா 1,546 விசாக்களைப் பெற்றுள்ளது, ஹெச்சிஎல் அமெரிக்கா 1,260 விசாக்களைப் பெற்றுள்ளது மற்றும் ஐபிஎம் 1,239 விசாக்களைப் பெற்றுள்ளது.

85000 ஹெச்1பி விசா

85000 ஹெச்1பி விசா

அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு வருடத்திற்கு 85000 ஹெச்1பி விசா அளிக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கும் மக்கள் எண்ணிக்கையான 165 மில்லியனில் இந்த 85000 பேர் வெறும் 0.05 சதவீதம் மட்டுமே.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த போது ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஜோ பைடன் ஆட்சியில் இது வேமாகக் குறைந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் விசா விண்ணப்ப நிராகரிப்பு அளவு 4 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 2022 ஆம் ஆண்டில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஏப்ரல் 2022 தகவல்

ஏப்ரல் 2022 தகவல்

ஏப்ரல் 2022 இல், US Citizenship and Immigration Services (USCIS) அமைப்பு 483,000 H-1B விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாகத் தெரிவித்துள்ளது. இது அதன் வருடாந்திர எண்ணிக்கையான 85000 ஐ ஒப்பிடுகையில் 40000 அதிகமாகும்.

ஹெச்1பி விசா காலம்

ஹெச்1பி விசா காலம்

பொதுவாக அமெரிக்க அரசு வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் பணியாற்ற அனுமதி அளிக்கும் முக்கியமான விசா தான் இந்த ஹெச்1பி விசா, இந்த விசா மூலம் 3 வருடத்தில் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும், இது முடிந்த பின்பு 6 வருடத்திற்கு விரிவாக்கம் செய்ய முடியும்.

85000 விசா கணக்கு

85000 விசா கணக்கு

இந்த நிலையில் அமெரிக்க அரசு ஒரு வருடத்திற்குப் பொதுப் பிரிவில் 65000 விசாவும், உயர் கல்வி அல்லது அமெரிக்கக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுக்கு 20000 விசா அளிக்கப்படும். ஆனால் அமெரிக்கா சிலி, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சிறப்பு ஒப்பந்தம் கீழ் தனிக் கோட்டா வைத்துள்ளது.

பல தனிக் கோட்டா

பல தனிக் கோட்டா

இப்படிப் பல கோட்டா கீழ் ஹெச்1பி விசா வழங்கி வரும் அமெரிக்கா இந்தக் கோட்டா கீழ் விசா அளிக்க முடியாவிட்டால் பொதுப் பிரிவில் விசாக்களை அளிக்கும். இதன் மூலம் வருடத்திற்குச் சராசரியாக 115000 விசாக்களை வழங்கி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 3 companies biggest winners in US H-1B visa draws in 2022: Amazon, TCS, Infosys

Top 3 companies biggest winners in US H-1B visa draws in 2022: Amazon, TCS, Infosys
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X