ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20 ஆசிய பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் 3 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
அதன் நவம்பர் இதழில் ஃபோர்ப்ஸ் ஆசியா பட்டியலை வெளியிட்டுள்ளது. இது ஆசியாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்த பட்டியலானது வெளியானது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் தலைவர் சோமா மோண்டல், எம்க்யூமர் பார்மாவின் இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குனர் நமிதா தாபர் மற்றும் ஹொனாசா நுகர்வோர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரியான கஜல் அலக் உள்ளிட்ட மூவரும் இந்த பட்டியலில் அடங்குவர்.
புதுமைகள் உருவாக்கம்
இந்த பெண்களில் சிலர் மிக கடினமான துறைகளான கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், மருந்து பொருட்கள் போன்ற துறைகளில், தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்று போர்ப்ஸ் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பல நாடுகளை சேர்ந்த பெண்கள்
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கஜல் அலக்
34 வயதான கஜல் அலக் பர்சனல் கேர் பிராண்டான மமார்த், தி டெர்மா கோ, அக்வாலஜிகா மற்றும் ஆயுகா ஜனவரி தொடக்கத்தில் ஒரு யூனிகார்னாக மாறியது. அது வென்ச்சர் கேபிடல் நிறுவனமான செக்வோயா கேபிடல் நிறுவனமான செக்வோயா கேபிடல் இந்தியா தலைமையிலான 52 மில்லியன் டாலர்களையும் திரட்டியது. இது 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான யூனிகார்ன் நிறுவனமாகும். இவர் தனது கணவருடன் இணைந்து குர்கானை தளமாகக் கொண்ட நிறுவனத்தை தொடங்கினார்.
ரசாயனம் கலந்த பொருட்கள்
தோல் நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைக்கு ரசாயனம் கலந்த மாற்று வழிகளை தேடும்போது தான், இந்த யூனிகார்ன் நிறுவனத்தினை தொடங்கினார். இந்தியாவில் எளிதாகக் கிடைக்கும் விருப்பங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு நச்சு இல்லாத ஒரு பொருளை தயாரிக்க விரும்பினோம். பேபி வாஷ், ஷாம்பு உள்ளிட்ட 7 தயாரிப்புகளுடன் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். அதன் பிறகு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் என பலவற்றையும் விற்பனை செய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெண்களை மையமாகக் கொண்ட பல பொருட்கள் அடங்கிய நிறுவன பங்குகளை வாங்க தொடங்கியது.
நமீதா தாபர்
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு பெண் தொழிலதிபர் நமிதா தாபர். 45 வயதான இவர் எம்க்யூமர் பார்மாவின் நிர்வாக இயக்குனராவார். இவர் ஒரு தொழிலதிபர். தொழில் முனைவோர் பயிற்சியாளர். ரியாலிட்டி ஷோ நீதிபதி மற்றும் எழுத்தாளர் என பல திறமைகளை தாபர் தன் வசம் வைத்துள்ளார். இவரின் தந்தையின் வணிகத்தினை மேற்பார்வையிட்டு வருகின்றார்.
சிறந்த தொழிலதிபர்
இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 2021ம் ஆண்டில் அதன் உள்நாட்டு வருவாயினை இருமடங்காக்கியுள்ளார். மொத்தத்தில் இந்த வணிகத்தினை சிறப்பாக வழி நடத்தும் தொழிலதிபராக வலம் வந்து கொண்டுள்ளார்.
சோமா மோண்டல்
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆவர் சோமா மோண்டல், இவர் ஜனவரி 2021ம் ஆண்டில் இந்த பதவியினை ஏற்றுக் கொண்டார். செயிலின் முதல் பெண் செயல்பாட்டு இயக்குனர் ஆவார். இவரே இந்த நிறுவனத்தின் முதன் பெண் தலைவராவார். இதற்கு முன்பாக பல முக்கிய பதவிகளை வகித்த சோமா,சிறந்த வணிகத் தலைவர்களில் ஒருவராவார்.


Click it and Unblock the Notifications