IT நிறுவனங்கள் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன ஹாட் நியூஸ்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல துறைகள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. ஆனால் இதற்கிடையில் ஒரு சில துறைகள் மட்டும் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக பார்மா, ஐடி துறை பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.

ஏனெனில் இந்த லாக்டவுன் காலத்தில் ஓரளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளன.

இதே இந்திய வங்கித் துறை கூட கொரோனாவினால் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

ஐடி துறைக்கு நல்ல எதிர்காலம்

ஐடி துறைக்கு நல்ல எதிர்காலம்

இதற்கிடையில் நிபுணர்கள் சில ஐடி பங்குகள் நல்ல பலனைக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். ஏனெனில் ஐடி துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கொரோனாவிற்கு மத்தியில் ஆன்லைன் தேவை அதிகரித்துள்ளதால், ஐடி துறைக்காக செலவிடும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். இது ஐடி துறைக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹெச்சிஎல் வருவாய் விகிதம்

ஹெச்சிஎல் வருவாய் விகிதம்

இதற்கு சிறந்த உதாரணம் தான், ஐடி துறையின் முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அடுத்த ஆண்டிற்கான வருவாய் விகிதத்தினை அதிகரித்துள்ளது தான். அதோடு சர்வதேச புரோகரேஜ் நிறுவனமான மார்கன் ஸ்டான்லியும், சிறந்த சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களின் இலக்கினை 17 - 33% அதிகரித்துள்ளது. இது அதன் தற்போதைய விலையிலிருந்து 11 - 14% அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று பங்குகள் பரிந்துரை

மூன்று பங்குகள் பரிந்துரை

தொற்று நோயினால் துரிதப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றம் மற்றும் கிளவுட் சேவையினை வழங்கி வரும் நிறுவனங்களின், செலவினங்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் தொடர்ந்து அவர்களது வளர்ச்சியினை மேம்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. அதோடு மூன்று பங்குகளையும் பரிந்துரைத்துள்ளது. இன்று ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், இரண்டாவது இன்ஃபோசிஸ், மூன்றாவது டெக் மகேந்திரா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கடந்த காலாண்டு அறிக்கைகள், சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக லாபம் அதிகரித்துள்ளது என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

தேவை அதிகமாக உள்ளது. இது வளர்ச்சிக்கு மீண்டும் துணைபுரியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையை பெற்றுள்ளனர். இதனால் முதலீடுகளை அதிகரிக்கரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை இலக்கு 735 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இது தற்போதைய சந்தை மட்டத்திலிருந்து 11% அதிகமாக உள்ளது.

அபார வளர்ச்சி கண்ட ஹெச்சிஎல்

அபார வளர்ச்சி கண்ட ஹெச்சிஎல்

கடந்த செப்டம்பர் 14 அன்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வருவாய் மற்றும் ஆப்ரேட்டிங் மார்ஜின் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இது நடப்பு காலாண்டில் வருவாய் வளர்ச்சி, 3.5% விட அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது மார்ச் மாத வீழ்ச்சியிலிருந்து, 94% அதிகரித்துள்ளது. மேலும் இந்த வாரம் புதிய வரலாறு உச்சமான 825.10 ரூபாயினை எட்டியுள்ளது.

 டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா நிறுவனத்தில் இலக்கினை 780 ரூபாயிலிருந்து, 920 ரூபாயாக அதிகரித்துள்ளது மார்கன் ஸ்டான்லி. இது தற்போதைய லெவலில் இருந்து கிட்டதட்ட 14% அதிகமாகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 2.66% அதிகரித்து, 807.90 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இதே கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இதன் இலக்கினை 845 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது மார்ச் மாத குறைந்தபட்ச விலையில் இருந்து, 90% ஏற்றம் கண்டுள்ளது. வரும் காலாண்டிலும் இந்த நிறுவனம் சாதகமான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்தின் அவுட்சோர்ஸிங் சேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபோசிஸ் இலக்கு விலை

இன்ஃபோசிஸ் இலக்கு விலை

இதற்கிடையில் தான் மார்கன் ஸ்டான்லி நிறுவனம், பெங்களுருவினை அடிப்படையாக கொண்ட இந்த ஐடி ஜாம்பவான் நிறுவனத்தின் இலக்கினை 950 ரூபாயிலிருந்து, 1,120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 11.6% அதிகமாகும்.

இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வருவாய் 1 - 3% அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+