சென்னை: இந்தியாவில் தற்போது மின்சார கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்யூவி கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு இருக்கக்கூடிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் சிறந்த ஐந்து கார்கள் என்னென்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹூண்டாய் கிரெடா (Hyundai Creta EV): அண்மையில் டெல்லியில் நடந்த வாகன கண்காட்சியில் தான் ஹூண்டாய் கிரெடா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 17.99 லட்சம் ஆகும். 42 kWh மற்றும் 51.4 kWh என இரண்டு பேட்டரி வகைகளை கொண்டுள்ளது. இதில் 51.4 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 473 கிலோமீட்டரும், 42 kWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 390 கிலோமீட்டரும் பயணிக்கும் திறன் கொண்டது. 52 வகையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. 6 ஏர் பேக்குகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி ( MG ZS EV):
எம்ஜி நிறுவனத்தின் MG ZS EV சிறிய ரக எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் இந்த வகையில் அறிமுகமாகும் முதல் கார் என சொல்லப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 18.98 லட்சம் முதல் 26.63 லட்சம் வரை இருக்கிறது. 50.3 kWh பேட்டரி கொண்டுள்ளது, இதில் 50 kW சார்ஜரை கொண்டு ஃபாஸ்ட் சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகிவிடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் தூரம் செல்லும். 8.5 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா என பல வசதிகளை கொண்டுள்ளது.
டாடா நெக்ஸான் (Tata Nexon EV):
இதில் 10 வித்தியாசமான மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எக்ஸ் ஷோரூம் விலை 12.49 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 45 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர் தூரம் செல்லும். 8.9 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். 30 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் தூரம் செல்லும். 9.2 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். voice-activated sunroof, 12.2-inch infotainment system என பல அம்சங்களை கொண்டுள்ளது.
மகேந்திரா பிஈ 6 (Mahindra BE 6):
5 வகைகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 19.40 லட்சம் ரூபாய். 59 kWh மற்றும் 79 kWh என இரண்டு பேட்டரிகள் இருக்கின்றன. fixed glass panoramic sunroof, 12.3-inch infotainment , 360 டிகிரி கேமரா மற்றும் மகேந்திராவின் பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்களையும் வடிவத்தையும் கொண்டுள்ளது.
டாடா கர்வ் (Tata Curvv EV) :
மூன்று வித்தியாசமான மாடல்களில் விற்கப்படுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 17.49 லட்சம் ரூபாய். 165 horsepower எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. 45 kWh பேட்டரி திறன் கொண்ட வாகனம் 501 கிலோமீட்டர் வரையும், 55 kWh பேட்டரி திறன் கொண்ட வாகனம் 585 கிலோமீட்டர் வரையும் சிங்கிள் சார்ஜில் செல்லும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications