முதலீட்டு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க பாதுகாப்பான முதலீட்டை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர். அப்படி இருக்கையில் பழமை வாத முதலீட்டாளர்கள் முதல் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலகட்டத்தை பொறுத்து அதற்கு வட்டி வருமானமும் கிடைக்கும்.
முதிர்வு காலத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து பெறலாம். ஆனால் பிக்சட் டெபாசிட்களைக் காட்டிலும் அதிக வட்டி வருமானம் வழங்கக்கூடிய பிற அரசாங்கத் திட்டங்களும் இருக்கிறது.

தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட்களைக் காட்டிலும் அதிக வட்டியுடன் பல திட்டங்கள் வழங்கப்படுகிறது. அது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் என்று சொல்லப்படுகிற இந்த திட்டத்திற்கு தற்போது 8.2% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு பிரிவு 80-சியின் கீழ் வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம்: இந்த திட்டத்தின் மூலம் மாதா மாதம் வட்டி வருமானம் பெறலாம். ஆனால் நீங்கள் பெரும் வருமானம் என்பது நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்கிறீர்களோ அதைப் பொறுத்தது. இந்த வருமானம் முழுவதும் வட்டி தான். முதிர்வு காலம் முடிந்த பிறகு உங்களுடைய அசல் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம். தற்போது இந்த போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி மட்டுமே கிடைக்கிறது. அதோடு ஒப்பிடுகையில் இது போன்ற திட்டங்கள் மக்களுக்கு அதிக வருவாயை தரும். அதுவும் குறிப்பாக மாதம் வருமானம் பெற நினைத்தால் இது போன்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
கிசான் விகாஸ் பத்ரா: இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் போடும் முதலீடு வெறும் 115 மாதங்களில் அப்படியே இரட்டிப்பாகும். உதாரணமாக ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும். ஆபத்து இல்லாத அதே சமயம் சிறந்த வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.
நேஷனல் சேவிங்ஸ் ஸ்கீம்: இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்திற்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: இந்தத் திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்தியேக திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள். பிக்சட் டெபாசிட்களைப் போலவே மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு வருமான வரி அடுக்கின்படி ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications