ஐடி மற்றும் டெக் துறை துறை என்றாலே அதிக சம்பளம், ராஜ வாழ்க்கை என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இத்துறைக்கே உரிய பிரச்சனைகள் சில உள்ளது. அதுதான் மாறி வரும் தொழில்நுட்பமும், ஒரே அனுபவம் காலம் கொண்டவர்களுக்கு அதிகப்படியான வித்தியாசத்துடன் கிடைக்கும் சம்பளம்.
இந்த ஏஐ காலத்தில் அதிகப்படியான சம்பளம் திரும் வேலைவாய்ப்புகள் தான் தற்போது பலரது கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி எந்த பதவிக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது..? இந்த பிரிவில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது..? எந்த தொழில்நுட்பத்திற்கு அதிகமான டிமாண்ட் உள்ளது..? என்பதை முழுமையாக பார்ப்போம்.

இந்திய ஐடி துறைகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான திறன்கள் வேகமாக மாறி வருகின்றன, இதனால் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்த மாற்றம், தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேவை அதிகம் உள்ள டெக் திறன்கள்
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற வேண்டுமானால், சில முக்கிய திறன்களை கற்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்படி தற்போது இந்திய டெக் துறையில் அதிக டிமாண்ட் இருக்கும் முக்கிய Tech Skills இது தான்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள், கிளவுட் கம்பியூட்டிங் எக்ஸ்பர்டீஸ், டிசைன் மற்றும் ஆர்கிடெக்சர், சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்போ செக்யூரிட்டி, டாப் 5 பட்டியலில் கடைசியாக DevOps ஆகிய திறன்கள் தற்போது அதிக அளவில் தேவைப்படுகின்றன. இந்த திறன்களை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகமாக உள்ளது, அதேபோல் சம்பளமும் கொடிக்கொடுக்கப்படுகிறது.

முக்கிய பதவிகள்
தற்போதைய டிரெண்டில் மெஷின் லேர்னிங் இன்ஜினியர், சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட், டெர் ஆர்கிடெக்ட் (என்டர்பிரைஸ், டேட்டா மற்றும் கிளவுட்), வெப் 3 புரோகிராமர்கள் மற்றும் பெண் பொறியியல் தலைவர்கள் போன்ற பதவிகள் தற்போது மிகவும் ஹாட் ஆக உள்ளது.
பதவிகளும் சம்பளமும்:
இந்திய டெக் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் (AI & ML) துறையில் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ.43 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.1.3 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2.1 கோடியும் சம்பளமாக கிடைக்கிறது.
அதேபோல், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.48 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.1 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1.4 கோடியும் கிடைக்கிறது.
தலைமை தொழில்நுட்ப வடிவமைப்பாளர் (CTA) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.60 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.3 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1.5 கோடியும் வழங்கப்படுகிறது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.60 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.2 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.2 கோடியும் கிடைக்கிறது.
தலைமை தகவல் அதிகாரி (CIO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.1.1 கோடியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்த சம்பளம் பெரிய ஐடி நிறுவனங்களிலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் (முதலீடு, வர்த்தகம், ஐபிஓ வெளியிடும் திட்டம் ஆகியவைற்றை பொருத்து) பெரிய அளவில் மாறுப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications