இப்பொழுதெல்லாம் இந்திய திரைப்படத் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவும், பிரம்மாண்டமான மற்றும் பெரிய திரைப்படங்களை தயாரிப்பதிலும் இந்திய திரைப்படத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அதில் முக்கியமாக தென்னிந்திய சினிமா முன்னிலையில் உள்ளது. இந்த சினிமாத்துறையில் திறமையான மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களுடைய நடிப்புத் திறமை, நடனம், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பயன்படுத்தி இந்தியாவில் பரவலான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். இப்பொழுது தென்னிந்திய நடிகர்களில் சிலர் பாலிவுட் நட்சத்திரங்களின் சம்பளத்தை விட அதிகமாக பெறுகின்றனர். இந்தப் பதிவில் அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகர்களின் விவரம் குறித்து பார்ப்போம்.
தென்னிந்திய சினிமா துறையில், பல முன்னணி நடிகர் நடிகைகள் உள்ளனர். அவற்றில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர், என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்: இவருடைய நிகர மதிப்பு ரூ. 430 கோடி மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் அவருடைய சம்பளம் ரூ. 280 கோடி என்று கூறப்படுகிறது.
ஜோசப் விஜய்: இவருடைய நிகர மதிப்பு ரூ. 474 கோடி. மேலும் இந்திய ரூபாய் மதிப்பின் படி, இவருடைய சம்பளம் ரூ. 125 கோடி.
பிரபாஸ்: இவருடைய நிகர மதிப்பு ரூ. 241 கோடி. இவருடைய சம்பளம் ரூ. 150-200 கோடி ஆகும்.
அஜித் குமார்: இவருடைய நிகர மதிப்பு ரூ. 196 கோடி. இவருடைய சம்பளம் ரூ.105-165 கோடி ஆகும்.
கமல்ஹாசன்: இவருடைய நிகர மதிப்பு ரூ. 150 கோடி ரூபாய். இவருடைய சம்பளம் ரூ. 100-150 கோடி.
ரஜினிகாந்த்: பல வருடங்களாக சினிமா துறையில் முன்னணி நட்சத்திரமாக நிகழும் இவர், ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆவார். இவர் ஒரு நடிகர் என்ற ஒரு அந்தஸ்தையும் தாண்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரபலமான நபராக உள்ளார்.
இவர் ஒரே ஒரு படத்தில் நடித்தால் மட்டுமே போதும், மக்களின் கூட்டம் அலைக் கடலென திரண்டு தியேட்டர்களின் முன் நிற்கும். அந்த அளவுக்கு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஃபேன் பேஸ் உள்ளது. முக்கியமாக ஒரு படத்தில் இவருடைய சமீபத்திய நடிப்பில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் ரூ. 110 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அந்த திரைப்படம் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
ஜோசப் விஜய்: தென்னிந்திய சினிமா துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய், 1984-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார். சென்ற வருடம் வெளியான வாரிசு மற்றும் லியோ ஆகிய படங்கள் உலக அளவில் ரூ.300 கோடி மற்றும் ரூ.612 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் 2023-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை லியோ திரைப்படம் பெற்றது.
பிரபாஸ்: பிரபாஸின் பாகுபலி என்னும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, இவருடைய நிகர மதிப்பு அதிகரித்தது. இந்த படம் வெளியாகி அடுத்த 8 ஆண்டுகளில் இவருடைய நிகர மதிப்பு 94% வரை உயர்ந்தது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது. இருந்தாலும் இவருடைய சமீபத்திய படமான சலார் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படத்தை மிஞ்சியது. ஜெயிலர் திரைப்படம் ரூ 348.55 கோடியை வசூல் செய்தது. அதனுடன் ஒப்பிடும்போது சலார் திரைப்படம் ரூ 369.37 கோடியை வசூலித்துள்ளது.
அஜித் குமார்: தென்னிந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான துணிவு திரைப்படம், இவருக்கு பிளாக்பஸ்டர் ஆக அமைந்தது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டை பெற்றது. இந்திய சினிமா துறையில் மொத்தமாக ரூ.130 கோடி வசூலித்தது.
கமல்ஹாசன்: தென்னிந்திய சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து வியக்காதவர்களே கிடையாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு அவருடைய படம் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் இவருடைய KH 234 திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் இரண்டாம் பாகம் விமர்சனங்களை பெற்று வந்தாலும், இவருடைய அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்தினம் இயக்குகிறார். இதில் STR ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!



Click it and Unblock the Notifications