இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமாக இருக்கும் எஸ்பிஐ, மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளிலும் முன்னணி நிறுவனமாக மாறி இருக்கிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எளிமையாக யோனோ செயலி வாயிலாகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ள முடியும்.
எஸ்பிஐ நிறுவனத்தை பொறுத்தவரை 60 மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் 9,90,090 கோடி மதிப்பிலான பணத்தை மேலாண்மை செய்து வருகிறது. 37 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தின் டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் எஸ்ஐபி மூலம் அவற்றில் கிடைத்த லாபம் குறித்து பார்க்கலாம்..

SBI PSU Mutual Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்டு 41.77 சதவீதம் என்ற அளவில் லாபம் தந்துள்ளது. இதில் மொத்தமாக ரூ. 4,603 கோடி பணம் மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் NAV ரூ.36.59 ஆகும். 11 ஆண்டுகள் பழமையான இந்த ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.78 சதவீதம் ஆகும். இது 90.98சதவீத தொகையை ஈக்விட்டியில் குறிப்பாக லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. இதில் மாதந்தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 5 ஆண்டுகளில் 32.90 லட்சமாக அதிகரித்திருக்கும்.
SBI Infrastructure Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்டு 36.93 சதவீதம் என்ற அளவில் லாபம் தந்துள்ளது. இதில் மொத்தமாக ரூ. 4,524 கோடி பணம் மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் NAV ரூ. 56.51 ஆகும். இந்த ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 1.17 சதவீதம் ஆகும். இது 90.83 சதவீத தொகையை ஈக்விட்டியில் முதலீடு செய்கிறது. இதில் மாதந்தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 5 ஆண்டுகளில் 29.44 லட்சமாக அதிகரித்திருக்கும்.
SBI Long Term Equity Fund Direct Plan-Growth: இந்த ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 33.56 சதவீதம் என்ற அளவில் லாபம் தந்துள்ளது. இதில் மொத்தமாக ரூ. 27,527 கோடி பணம் மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் NAV ரூ. 471.28 ஆகும். இது 92.63 சதவீத தொகையை ஈக்விட்டியில் முதலீடு செய்கிறது. இதில் மாதந்தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 5 ஆண்டுகளில் 27.23 லட்சமாக அதிகரித்திருக்கும்.
SBI Small Cap Fund: இந்த ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 32.28 சதவீதம் என்ற அளவில் லாபம் தந்துள்ளது. இதில் மொத்தமாக ரூ. 32,761 கோடி பணம் மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் NAV ரூ. 202.84 ஆகும். இது 93.31 சதவீத தொகையை ஈக்விட்டியில் முதலீடு செய்கிறது. இதில் பெரும்பாலானது ஸ்மால் கேப் நிறுவனங்கள் ஆகும். இதில் மாதந்தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 5 ஆண்டுகளில் 26.42 லட்சமாக அதிகரித்திருக்கும்.
SBI Magnum Mid Cap Direct Plan-Growth: இந்த ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 32.13 சதவீதம் என்ற அளவில் லாபம் தந்துள்ளது. இதில் மொத்தமாக ரூ. 21,127 கோடி பணம் மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் NAV ரூ. 262.45ஆகும். இதில் மாதந்தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 5 ஆண்டுகளில் 26.33 லட்சமாக அதிகரித்திருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications