Mutual funds: முதலீட்டாளர்கள் ஈக்விட்டிகளின் மீதுள்ள நம்பிக்கையின் மத்தியில் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்திய மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 31 சதவீதம் அதிகரித்து, 20,534.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்த தரவானது மியூச்சுவல் பண்ட் அசோசியேஷன் அமைப்பான AMFI மூலம் வெளியிடப்பட்ட தரவாகும்.

இந்த பண்டுகள் மட்டும் அல்ல, அனைத்து மியூச்சுவல் பண்டுகள், டிவிடெண்ட் வருமானம் கொடுக்கும் பண்டுகள் அனைத்திலும் முதலீடுகள் கடந்த மார்ச் மாதத்தில் அதிகளவில் ஈர்த்துள்ளது.
இதே கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 15,700 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இதில் ELSS பண்டுகளில் சுமார் 4200 கோடி ரூபாய் எனும் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதே பிப்ரவரி மாதத்தில் 2,300 கோடி ருபாய் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 84% எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. தீமெட்டிக் மற்றும் செக்டோரல் பண்டுகளும் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
ஸ்மால் கேப் பண்டுகளும் தொடர்ந்து கணிசமான முதலீடுகளை சமீபத்திய மாதங்களாக ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் டிவிடெண்ட் வருமானம் கொடுக்கும் பண்டுகளில் அதிகளவிலான முதலீடுகள் ஈர்த்துள்ளது.
வெளியான தரவின் படி , இந்த துறையின் ஒட்டுமொத்த AUM மதிப்பானது 39,42,031 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தங்க இடிஎஃப்-பிலும் கணிசமான முதலீடுகள் என்பது அதிகரித்துள்ளது. மொத்தத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் என்பது மக்கள் மத்தியில் தற்போது விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் முதலீடுகள் மீதான ஆர்வமும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் தான் சமீபத்திய ஆண்டுகளாக மியூச்சுவல் பண்டுகளில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
முதலீட்டு ஆலோசகர்களை பொறுத்த வரையில் முதலீட்டு போர்ட்போலியோக்களில் மியூச்சுவல் பண்டுகள் அவசியமான ஒன்றாக கூறுகின்றனர். ஆக எதிர்காலத்தில் இன்னமும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications