இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஓராண்டு காலத்தில் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக முக்கியமான குறியீடுகள் அனைத்தும் சராசரியாக 40% வரை உயர்வு கண்டுள்ளன. பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் 25% வளர்ச்சி அடைந்துள்ளது ,நிஃப்டி 28% வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு பென்னி ஸ்டாக்குகளும் முதலீட்டாளர்களுக்கு பல்லாயிரம் மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளன. அப்படி முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய பங்குகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம்.

ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் (Sri Adhikari Brothers Television Network Ltd) நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ஓராண்டு காலத்தில் 170 மடங்கு அதாவது 16,545 % உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.1.40, ஆனால் தற்போது ரூ.237.68 என உயர்ந்துள்ளது.
ஓரு ஆண்டுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 17 லட்சமாக உயர்ந்திருக்கும். கடந்த ஆறு மாத காலத்தில் கூட இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9,000 % உயர்ந்துள்ளது.
சீனிக் எக்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் (Ceenik Exports India Ltd (NDA) ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 5654 % உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 5.51 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 577% லாபத்தை பெற்று தந்துள்ளது.
வைசிராய் ஹோட்டல்ஸ் லிமிடெட் (Viceroy Hotels Ltd) நிறுவனத்தின் பங்கு ஓராண்டு காலத்தில் 4,280 % உயர்ந்துள்ளது. அதேபோல ஆறு மாத காலத்தில் இது 164 % உயர்வினை கண்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு 4.56 லட்சம் ரூபாய் ஆகும்.
இண்டெக்ரா ஸ்விட்ச்கியர் (Integra Switchgear Ltd) நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 3110 % லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 3.37 லட்சமாக உயர்ந்திருக்கும் .கடந்த ஆறு மாத காலத்திலும் இந்த நிறுவனத்தின் பங்கு 59 % உயர்வு கண்டுள்ளது.
ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்(Rathi Steel And Power Ltd ) நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 1392% லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 1.20 லட்சம் ரூபாயாக இருந்திருக்கும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 67% லாபத்தை பெற்று தந்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications