ஆண் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவை பாதுகாப்பான மற்றும் நம்பகமான விருப்பமாக நம் நாட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த திட்டங்கள் நிச்சயம் உறுதியான வருமானத்தை வழங்கும். மேலும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது வருமானமும் இயல்பை விட சற்று அதிகமானதாக இருக்கும். உயர்கல்விக்காக சேமிக்க வேண்டுமானாலும் சரி.. திருமணத்திற்காக சேமிக்க வேண்டுமானாலும் சரி.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் தங்கள் மகனுக்கு முதலீடு செய்யும்போது எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் ஆண் குழந்தைக்காக நீங்கள் முதலீடு செய்யலாம்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கும் எளிதாக இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கிடைக்கும். எனவே இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு கணிசமான வருமானத்தை உருவாக்க முடியும்.

ஒரு ஆண் குழந்தையின் கல்விக்காக அல்லது எதிர்காலத்தில் அந்த குழந்தை தொடங்க இருக்கும் தொழிலுக்காக என எதற்காக வேண்டுமானாலும் அந்த வருமானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இந்தியாவில் மிகவும் பிரபலமான நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இது வரி சலுகைகள் மற்றும் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்திய அரசாங்கத்தால் 1968-ஆம் ஆண்டு PPF திட்டம் தொடங்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் மகனின் பெயரில் PPF கணக்கைத் திறக்கலாம்.
PPF 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் ஈட்டிய வட்டிக்கு வரி இல்லை. கூடுதலாக, PPF திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
பொன்மகன் சேமிப்புத் திட்டம்: பொன்மகன் சேமிப்புத் திட்டம் ஆண்குழந்தைகளுக்கான பிரத்யேகமான சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது கடந்த செப்டம்பர் 2015-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். எப்படி பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் தான் பொன் மகன் சேமிப்புத் திட்டம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது ஒரு புகழ்பெற்ற அரசாங்க சேமிப்புத் திட்டமாகும். NSC திட்டத்திற்கான முதிர்வுக்காலம் 5 ஆண்டுகள். இதற்கு 7.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
NSC திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும் கிடைக்கிறது, NSC-யில் பெறப்படும் வட்டிக்கு பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD): சிறிய தொகைகளை தவறாமல் முதலீடு செய்ய விரும்பும் பெற்றோருக்கு, போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். RD திட்டத்தில் பெற்றோர்கள் தவறாமல் மாதம் மாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். மேலும் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு உத்தரவாதமான வருமானம் வழங்கப்படுகிறது.
டெபாசிட் செய்யக்கூடிய தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லாததால், RD திட்டத்தில் பெற்றோர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். நிலையான வருமானத்தை ஈட்ட இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): கிசான் விகாஸ் பத்ரா என்பது கிராமப்புற மக்களிடையே சேமிப்பை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். ஆரம்பத்தில் விவசாயிகளை இலக்காகக் கொண்ட KVP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனால் இப்போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைக்கிறது.
KVP திட்டத்தின் முதிர்வு காலம் 10 ஆண்டுகள், இந்த பத்து ஆண்டுகளுக்குள் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும் அதாவது 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 லட்சம் ஆகும். உயர்கல்வி அல்லது திருமணம் போன்ற தங்கள் மகனின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான தொகையைப் பெற விரும்பும் பெற்றோருக்கு இது ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications