நம் நாட்டில் நிலையான வருமானத்தை தரும் பாதுகாப்பான முதலீடாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. அதற்கு ஏதுவாக பல வங்கிகளும் போட்டி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, HDFC பேங்க், ICICI பேங்க், கோடக் மகேந்திரா பேங்க் மற்றும் PNB பேங்க் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள வங்கிகள் 6 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்தக் கட்டுரையில் இந்த 6 முன்னணி வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பொது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு 6.5% வட்டியை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியை வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா: பேங்க் ஆப் பரோடா பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களாகும். அதேபோல 399 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
HDFC பேங்க்: HDFC பேங்க் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. அதே நேரத்தில், 55 மாத FD-இல், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.4% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.9% வட்டியும் வழங்கப்படுகிறது.
ICICI பேங்க்: ICICI பேங்க் தனது 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது தவிர, 15 முதல் 18 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 7.25% முதல் 7.8% வரையிலான வட்டி கிடைக்கும்.
கோடக் மஹிந்திரா பேங்க்: கோடக் மஹிந்திரா பேங்க் பொது மக்களுக்கு 6.2% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.7% வட்டியையும் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்குகிறது. வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.4% ஆகும். இது 390 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: PNB பேங்க் தனது 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது மக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கி 400 நாட்கள் கொண்ட FD-களுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications