முதலீடு செய்ய வேண்டும் ஆனால் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பிக்சட் டெபாசிட்களை மட்டுமே. தற்போது பல வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. இதன் முக்கிய காரணம் என்று பார்த்தால் தற்போது மக்களின் டெபாசிட் தொகை குறைந்து வங்கிகளின் கடன் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. இதை அடுத்து பல வங்கிகளும் போட்டி போட்டு வட்டி விகிதங்களில் FD-களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் சில வங்கிகள் பண்டிகை கால சிறப்பு பிக்சட் டெபாசிட்களையும் அறிமுகம் செய்கின்றன. இந்தப் பதிவில் 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்களுக்கு எந்த வங்கியில் சிறந்த வட்டி வழங்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்ப்போம்.
வட்டி விகிதங்கள் பொதுவாக பல வங்கிகளிடையே மாறுபடக்கூடும். ஒரு சில வங்கிகள் குறைந்த வட்டியை வழங்கலாம். ஆனால் எந்த வங்கியில் முதலீடு செய்தாலும் ஒரே ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கும். அது என்னவென்றால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது அதிக வட்டியை வழங்கும் என்பதுதான். எனவே 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்களுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமாக உள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா (BOB): பேங்க் ஆஃப் பரோடாவில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5% வட்டி 5 ஆண்டுகால பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.15 சதவீத வட்டி 5 ஆண்டுகால பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா மான்சூன் தமாக்கா டெபாசிட் ஸ்கீம் (Monsoon Dhamaka deposit scheme) என்ற பெயரில் ஒரு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதிர்வு காலம் 399 நாட்கள். இந்த பிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீத வட்டி பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வழக்கமான பிற திட்டங்களை விட சற்று அதிகம். அதேபோல மூத்த குடிமக்களுக்கு இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட்டில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது.
HDFC பேங்க்: HDFC பேங்கில் 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வழங்கப்படுகிறது. அதேபோல 55 மாத கால பிக்சட் டெபாசிட்களுக்கு 7.4 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இதைவிட கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படும்.
ஐசிஐசிஐ பேங்க்: ஐசிஐசிஐ பேங்கில் 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வழங்கப்படுகிறது. 15 முதல் 18 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுவாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.8 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
கோடக் மகேந்திரா பேங்க்: கோடக் மகேந்திரா பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.2% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.7 சதவீத வட்டியும் 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்குகிறது. மேலும் 390 நாட்கள் கால அவகாசம் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.4 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு PNB பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியும் வழங்குகிறது, அதேசமயம் 400 நாட்களுக்குகான FD-க்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications