இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். நம் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. தீபாவளியின் போது மக்கள் ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் என பலவற்றுக்கும் அதிக தொகையை செலவு செய்கின்றனர். இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள், நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் இந்த பண்டிகைக்காக செய்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை 4.25 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பண்டிகைக்கு மக்கள் எவ்வளவு செலவு செய்ய உள்ளனர் என்பது இதை வைத்தே தெரிந்திருக்கும். எனவே நீங்களும் இந்த தீபாவளிக்கு வெற்றிகரமாக ஒரு வணிகத்தை தொடங்கி லாபம் பெறலாம். இந்தப் பதிவில் தீபாவளி பண்டிகைக்கு தொடங்கக்கூடிய பிசினஸ் ஐடியாக்கள் குறித்து பார்ப்போம்.

தீபாவளி பலகாரங்கள்: தீபாவளி பண்டிகையில் பலகாரங்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன. காலம் காலமாக தீபாவளி பண்டிகையின் போது மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பே முறுக்கு, அதிரசம், சோமாசா, தேங்காய் பர்பி என தங்களுக்குப் பிடித்த பலகாரங்களை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
ஆனால் கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்லும் குடும்பமாக இருந்தால், வீட்டில் பலகாரங்கள் செய்ய நேரம் இருக்காது. எனவே இது போன்ற நபர்களை கூறி வைத்த தீபாவளி பலகாரங்களை விற்பனை செய்யலாம். தீபாவளியின் போது இனிப்புகள், உலர் பழங்கள் போன்றவற்றிற்கு டிமாண்ட் அதிகரிக்கும். எனவே நீங்கள் பலகாரம் செய்வதில் கைதேர்ந்தராக இருந்தால் இது போன்ற பண்டிகைக் கால பலகாரங்களை செய்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றாலும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற முடியும்.
பரிசுப் பொருட்கள்: தீபாவளி என்பது பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் நேரம் என்பதால், பரிசுப் பொருட்களின் தேவை அதிகரிக்கும். தனிப்பயனாக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அலுவலக பொருட்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.
ஆடைகள்: தீபாவளியின் போது பலரும் பாரம்பரிய உடைகளை விரும்பி வாங்குகின்றனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஜவுளித் தொழிலை செய்யலாம். ஏனெனில் தீபாவளி பண்டிகையின் போது குறிப்பாக மக்கள் பெரும்பாலானோர் ஜவுளிக் கடைகளில் குவிகின்றனர். உங்களால் அனைவருக்கும் ஏற்ற உடைகளை விற்பனை செய்ய முடியவில்லை என்றாலும், பெண்களை மட்டும் குறி வைத்து சாரி (saree) தொழிலை தொடங்கலாம். இதை நீங்கள் ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.
பட்டாசுகள்: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது என்ற கவலை எழுந்துள்ளது. ஆனால் பட்டாசு வெடிக்காமல் பலருக்கும் தீபாவளி பண்டிகை நிறைவு பெறாது. எனவே கிரீன் கிராக்கர்ஸ் என்று சொல்லப்படுகிற பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யலாம். இந்த கிரீன் கிராக்கர்ஸ் குறைவான நச்சுத்தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பட்டாசு கடை தொடங்குவதற்கு லைசன்ஸ் பெற வேண்டும். எனவே இந்த தொழிலை செய்வதற்கு சற்று முன்னரே யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
அலங்காரப் பொருட்கள்: தீபாவளி பண்டிகையின் போது பலரும் தங்கள் வீட்டை அலங்கரிக்கும் தோரணங்கள், பேப்பரால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிலர் தங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். எனவே வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம்.
பூ வியாபாரம்: எந்த ஒரு பண்டிகையானாலும் சரி பூக்கள் இல்லாமல் நிறைவு பெறாது. பூஜை அறைகளில் வைப்பதற்கு, தலையில் வைத்துக் கொள்வதற்கு, கோவிலுக்கு செல்வதற்கு என அன்றைய தினம் பூக்களுக்கான தேவை அதிகரிக்கும். அதேபோல முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். இதனை ஈடு செய்யும் பொருட்டு சில்லறை விற்பனையாளர்களும் சற்று அதிக விலையில் பூக்களை விற்பனை செய்வார்கள். எனவே நீங்களும் பூ விற்பனையைத் தொடங்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications