இந்திய ரியல் எஸ்டேட் துறையில் எப்போதும் இல்லாத வகையில் 2023 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் அதிகப்படியான வீடுகள் விற்கப்பட்டு உள்ளதாக ரியல் எஸ்டேட் கன்சல்டென்ட் நிறுனமான ANAROCK தெரிவித்துள்ளது. இந்தியாவில் இக்காலக்கட்டம் மிகவும் மந்தமான வர்த்தக நிலை பதிவு செய்யும் காலக்கட்டம் என்றாலும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் விற்பனை பதிவாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஆர்பிஐ கடந்த இரு நாணய கூட்டங்களாக வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்தது தான் என கூறப்பட்டாலும் வரலாறு காணாத வகையில் வீடுகள் விற்பனையாக முக்கியமான காரணம் பெரு நகரங்களில் இருக்கும் அதிகப்படியான வாடகை மூலம் பலரையும் வீடு வாங்க தூண்டியுள்ளது.

இந்தியாவின் ஏழு டாப் பெரு நகரங்களில் வீடுகளின் விற்பனை 120,280 யூனிட்களை எட்டியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் இதே மாதங்களில் விற்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை வெறும் 88,230 யூனிட்கள் மட்டுமே. கடந்த வருட விற்பனை தரவுகளை ஒப்பிடுகையில் சுமார் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதோடு ரியல் எஸ்டேட் ஆலோசகர் அனாரோக் வெளியிட்டு தரவுகளில் இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலப் பகுதியில் சுமார் ஏழு நகரங்களில் சராசரியாக வீட்டு விலைகள் வருடாந்திர அடிப்படையில் சுமார் 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது, ஆயினும் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
7 டாப் பெரு நகரங்களில் வீடுகளின் விற்பனையில் மும்பை பெருநகரப் பகுதி முன்னணியில் உள்ளது. மும்பையில் பெருநகர பகுதியில் மட்டுமே தோராயமாக சுமார் 38,500 வீடுகள் விற்பனையாகி அதிக விற்பனை செய்துள்ளது. அடுத்தபடியாக புனே கிட்டத்தட்ட 22,885 வீடுகளை விற்பனை செய்து 2வது இடத்தில் உள்ளது.
மேலும் செப்டம்பர் காலாண்டில் செய்யப்பட்ட மொத்த விற்பனையில் மேற்கத்திய நகரங்கள் மட்டுமே சுமார் 51 சதவீத விற்பனை பங்கீட்டை பெற்றுள்ளது. இதில் முக்கியமாக மும்பையில் வீடுகள் விற்பனையில் 46 சதவீதமும், புனே-வில் 63 சதவீத வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications