உயர்கல்வி படிப்பு இல்லாமலேயே உயர் சம்பளம் பெறும் வேலை கிடைக்குமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். படிப்பு இல்லாமலும் அதிக சம்பளம் பெறும் வேலையை செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் படிப்பு முக்கியமானது என்றாலும், திறமைகள் மற்றும் அனுபவமே சிறந்த ஆசானாக விளங்குகிறது. இந்தக் கட்டுரையில், பட்டப் படிப்பு இல்லாமல் அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்புகள் பற்றி காண்போம்.
மேக்கப் ஆர்டிஸ்ட் (Makeup Artist) : டிவி சீரியல்கள், திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விசேஷங்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் தேவைப்படுகின்றனர். இந்தத் தொழிலுக்கு முறையான கல்வி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மாறாக உங்களுக்கு மேக்கப் சிறந்த முறையில் செய்ய தெரியும் என்றால் அதுவே போதுமானது. அதற்கு நீங்கள் ஒரு சிறந்த மேக்கப் பயிற்றுவிப்பாளரிடம் சென்று பயிற்சி பெற்று அழகாக மேக்கப் போடத் தெரிந்தால், அதிலிருந்து மாதம் மாதம் கணிசமான வருமானத்தை பார்க்க முடியும்.

நாய்க்குட்டி பயிற்சியாளர்கள் (Dog trainers): நாய்க்குட்டி பயிற்சியாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு எவ்வாறு வீட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கற்பிக்கும் திறமையை பெற்றிருப்பார்கள். நாய்க்குட்டிகளின் நடத்தை மற்றும் அதனுடன் தொடர்பு கொள்ளும் முறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். உங்களுக்குத் செல்ல பிராணிகள் பிடிக்கும் என்றால், நீங்களும் நாய் குட்டி பயிற்சியாளர் ஆவதற்கு முயற்சி செய்யலாம். இதற்கு எந்த ஒரு முறையான கல்வியும் தேவையில்லை. அதற்கு செல்ல பிராணிகளை கையாளும் முறையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.
சமையல்காரர்(Chef or head cook): வீட்டு விசேஷங்கள் ஆனாலும் சரி, ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் சரி சமைப்பதற்கு ஒரு சமையல்காரரைத் தான் தேடுகிறோம். ஏனெனில் பலருக்கும் அதிக அளவிலான உணவுகளைச் சமைப்பது கடினமாக இருக்கலாம். இதனை ஒரு கைதேர்ந்த சமையல்காரரால் மட்டுமே செய்ய முடியும். உங்களுக்கு சமையல் செய்வதில் ஆர்வம் இருந்து, அதில் அனுபவமும் இருந்தால் புகழ்பெற்ற உணவகங்களில் செஃப் ஆகலாம். அல்லது கேட்டரிங் தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாம்.
வெட்டிங் பிளானர் (Wedding planner): திருமண நிகழ்வுகள் மற்றும் பிற வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்விற்கு டெக்கரேஷன் செய்வது வழக்கம். அந்த டெக்கரேஷன்களை செய்வதற்கு ஒரு திட்டமிடுபவர் தேவைப்படுகிறார். இத்துறையில் நுழைவதற்கு எந்த ஒரு கல்வியும் அவசியமில்லை. அதற்கு மாறாக திருமண திட்டமிடுதல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இத்துறையில் இருப்பவர்கள் வலுவான நெட்வொர்க்கை வைத்திருக்க வேண்டும். டெக்கரேஷன் மட்டுமின்றி, திருமணத்திற்கு தேவையான கேட்டரிங் சர்வீஸ், மேக்அப் ஆர்டிஸ்ட், போட்டோகிராபி, விருந்தினர்களை உபசரிக்க தேவையான ஆட்கள் போன்ற நெட்வொர்க் இருந்தால், நீங்கள் வெட்டிங் பிளானர் ஆகலாம்.
ஹேக்கர்: மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமையான ஹேக்கர் தேவைப்படுகின்றனர். ஏனெனில் ஹேக்கர்களுக்கு தான் எப்படி ஒருவருடைய டேட்டா திருடப்படுகிறது என்ற விவரங்கள் தெரியும். எனவே, இதற்கு எந்தவிதமான பட்டப்படிப்பும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஹேக்கிங் சம்பந்தப்பட்ட கோர்ஸ் முடித்து இருந்தால் போதுமானது.
ஏர் ஹோஸ்டஸ் (Air hostess): இந்த வேலைக்கு குறிப்பிட்ட பட்டம் கட்டாயமில்லை என்றாலும், வாடிக்கையாளர் சேவையில் முன் அனுபவம் பெரும்பாலும் விரும்பப்படுகிறது. விமான பணிப்பெண்கள் பொதுவாக விமான நிறுவனங்களால் வழங்கப்படும் பயிற்சியை மேற்கொள்வதோ அல்லது பணிக்குச் செல்வதற்கு முன் சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புகளை முடிப்பதோ வழக்கம். பன்னாட்டு விமானங்களில் பணிபுரிய விரும்புவோருக்கு, குறிப்பாக பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாக இருக்கலாம்.
வணிக விமானி (Commercial pilot): பயணிகள் விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் சரக்கு விமானங்களை இயக்குபவர்கள் வணிக விமானியாவார்கள்.வணிக விமானி ஆவதற்கு இந்தியாவில் உள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து வணிக பைலட் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications