பாலிவுட் பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் 24 மணி நேரமும் அவர்களைப் பாதுகாக்கும் அவர்களின் பாடிகாட்-கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக பிரபலங்கள் வெளியில் செல்லும்போது கூட்ட நெரிசலில் இருந்து அவர்களை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவர்களின் பாடிகாட்களுக்கு உள்ளது. எனவே இவர்களுக்கும் கணிசமான வருமானம் வழங்கப்படுகிறது. இந்த பதிவில் டாப் 10 பாலிவுட் நட்சத்திரங்களின் பாடிகாட்கள் பெரும் சம்பளம் குறித்து பார்ப்போம்.
பெரும்பாலும் பிரபலங்கள் வெளியில் செல்லும்போது அவர்களை சுற்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் இருக்கும். இதனால் அவர்களுடைய பிரைவசியை பாதுகாக்கும் பொருட்டு தங்களுக்கு ஏற்ற பாடிகார்டுகளை நியமித்து வைத்துக் கொள்கின்றனர். அதோடு அவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை விட அதிகமான சம்பளமும் வழங்குகின்றனர். அப்படி பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பாடிகாடுகளுக்கு வழங்கும் சம்பளத்தை பார்ப்போம்.

ஆலியா பட்: ஆலியா பட்-இன் பாதுகாவலரான சுனில் தலேகர் ஆண்டு வருமானமாக ரூ.50 லட்சம் பெறுகிறார். இவர் ஆலியா பட் சிறுவயதாக இருக்கும் போதிலிருந்தே பணிபுரிந்து வருகிறார்.
தீபிகா படுகோன்: தீபிகா படுகோனின் பாடிகார்ட் ஜலாலுதீன் ஷேக் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் சம்பளம் பெறுகிறார்.
ஸ்ரேயா கபூர்: இவருடைய பாடிகார்ட் அதுல் கம்பிளே ஆண்டுக்கு 95 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
கத்ரினா கைஃப்: கத்ரினா கைஃப் தீபக் சிங் என்ற பாடிகார்டுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறார்.
அனுஷ்கா ஷர்மா: அவரது பாடிகார்டான பிரகாஷ் சிங்கிற்கு ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறார்.
அக்ஷய் குமார்: அக்ஷய் குமார் தனது பாடிகார்டான ஷ்ரேயாஸ் டெலிக்கு ஆண்டு வருமானமாக ரூ.1.2 கோடி வழங்குகிறார்.
அமிதாப் பச்சன்: அமிதாப் பச்சனின் பாதுகாவலரான ஜிதேந்திர ஷிண்டே, ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிக்கிறார்.
அமீர் கான்: அமீர் கானின் பாடிகார்டான யுவராஜ் கோர்படே ஆண்டுதோறும் ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்.
சல்மான் கான்: சல்மான் கானின் பாடிகார்ட் ஷேரா, பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார். அவரது அர்ப்பணிப்பு சேவை மற்றும் உயர்தர பாதுகாப்புப் பாத்திரத்திற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்.
ஷாருக்கான்: ஷாருக்கானின் பாதுகாவலரான ரவி சிங், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் பாடிகார்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவரது சேவைகளுக்காக ஆண்டுதோறும் ரூ.2.7 கோடி சம்பாதிக்கிறார்.
பிரபலங்கள் பொது இடங்களில் தோன்றும் போது, கூட்டம் அதிகரித்து, அவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களை தாக்குதல், துன்புறுத்தல், தொந்தரவு செய்தல் போன்றவை நிகழலாம். பாடிகார்ட்கள் அவர்களை பாதுகாத்து, அத்தகைய சூழ்நிலைகளை தடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications