பெங்களூரு நகரம் அதன் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்காக பெயர் பெற்ற ஊர். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் இந்த நகரத்தில் பல கோடீஸ்வரர்களும் தங்கி இருக்கின்றனர். பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பல பிரிமியம் குடியிருப்பு பகுதிகள் பணக்காரர் மற்றும் செல்வந்தர்களின் நகரமாக மாறி இருக்கின்றன. எக்கனாமிக் டைம்ஸ்-இன் கூற்றுப்படி 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூர் முழுவதும் வீட்டு விலை 19 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியலின்படி, மும்பையில் 92 பில்லியனர்களும், டெல்லியில் 57 பில்லியனர்களும், பெங்களூரில் 27 மில்லியனர்களும் உள்ளனர். நாட்டின் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் பெங்களூர் 3-வது இடத்தில உள்ளது. குவெஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் அஜித் ஆபிரகாம் ஐசக், இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் பெங்களூரின் முக்கிய நகரங்களில் முதலீடு செய்துள்ளனர். 27 பில்லியனர்களும் வசிக்கும் பெங்களூரின் விலை உயர்ந்த குடியிருப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்திரா நகர்: இந்திரா நகர் பெங்களூர் பில்லியனர்கள் குடியேறும் முக்கிய பகுதியாகும். இங்கு உயர்தர குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இந்தப் பகுதியில் ஆடம்பர பங்களாக்கள், விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றை வைத்திருக்கும் செல்வந்தர்கள் வசிக்கின்றனர். இந்திரா நகரில் பொட்டிக்குகள், ஷாப்பிங் சென்டர்கள், கஃபேக்கள், உணவகங்கள் என எண்ணற்ற வசதி அமைந்துள்ளது. இதுவும் செல்வந்தர்களின் இந்த பகுதியில் குடியேறுவதற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
கோரமங்களா: பெங்களூரின் மற்றொரு வசதியான குடியிருப்பு பகுதி கோரமங்களா. இது பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிறைய IT பார்க்குகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்தப் பகுதியில் சொத்து விலைகள் பிற இடங்களோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம். உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஆடம்பரமான பங்களாக்கள் வரை கோரமங்களாவில் பல்வேறு குடியிருப்பு வளாகங்கள் உள்ளது. இந்தப் பகுதிகள் தொழில் முனைவோர், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் இடம் வாங்குகின்றனர்.
சதாசிவநகர்: பெங்களூரில் உள்ள மற்றொரு வசதியான குடியிருப்பு பகுதி சதாசிவநகர். இந்தப் பகுதியில் சொத்து விலைகள் சாமானிய மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும் பெரும்பாலான செல்வந்தர்கள் இங்கு சொத்துக்களை வாங்குகின்றனர். பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் சதாசிவ நகர் இருப்பதால் பிரபல செல்வந்தர்களின் தேர்வாக உள்ளது.
சதாசிவநகர் விசாலமான பகுதி என்றே சொல்லலாம். வில்லா-க்கள், டுப்லெக்ஸ் வீடுகள் மற்றும் உயர்ரக அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பல்வேறு ரியல் எஸ்டேட் வளாகங்கள் இங்கு உள்ளது. கூடுதலாக பூங்காக்கள், வெளியில் செல்வதற்கு ஏற்ற இடங்கள், ஷாப்பிங் மால்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள் என வசதி படைத்தவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
சாந்தலா நகர்: சாந்தலா நகரில் பிரீமியம் குடியிருப்புகள் அதிகம் கிடைக்கிறது. இதன் காரணமாக அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், வணிகர்கள் மற்றும் பிற வசதி படைத்தவர்களுக்கு முதன்மை முதலீட்டு தேர்வாக சாந்தலா நகர் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பிரபலமான லாவெல்லே சாலை பல செல்வந்தர்களையும் ஈர்த்து வருகிறது. அதோடு அருகிலேயே பள்ளிகள், கல்லூரிகள், உயர்மட்ட மருத்துவமனைகளும் உள்ளது. இதன் காரணமாக வீடு வாங்குபவர்களுக்கு விரும்பத்தக்க பகுதியாக சாந்தலாலா நகர் மாறியிருக்கிறது.
ஒயிட்ஃபீல்ட்: முன்பு ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக இருந்தது. இருப்பினும் 90-களின் பிற்பகுதியில் பெங்களூருவில் ஐடி துறை பெரிய வளர்ச்சியை கண்டபோது இந்தப் பகுதி முழுமையாக மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் திறப்பு என இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி தென்பட்டது. இதன் காரணமாக ஒயிட்ஃபீல்டு பகுதியில் சொத்துக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ரிச்மண்ட் டவுன்: ரிச்மண்ட் டவுன் பகுதியில் பிரீமியம் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. வரலாற்று கட்டிடக்கலை, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக இந்த பகுதிக்கு பல செல்வந்தர்களும் படையெடுக்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் ஒரு இடமாக செயல்படுவதால் பல ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கும் ரிச்மண்ட் டவுன் சிறந்த தேர்வாக இருக்கிறத..
ராஜாஜி நகர்: ராஜாஜி நகர் பெங்களூரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். சி.ராஜகோபாலச்சாரியின் பெயரால் ராஜாஜி நகர் என பெயரிடப்பட்டது. இது பெங்களூருவின் மிகப்பெரிய புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். பிற இடங்களைப் போலவே இங்கும் சொத்து விலை அதிகம்.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications