கோடை காலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் பலருக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்தாலும்.. பல புதிய வணிகம் தொடங்கவும் இதுதான் சரியான நேரம். ஏனெனில் கோடை காலத்தில் மட்டும் பிரத்தியேகமாக தொடங்கக்கூடிய பல தொழில்கள் உள்ளன. அவை என்ன? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
குளிர்பானம்: கோடை வந்து விட்டால் குளிர்பான உற்பத்தியாளர்களுக்கு குஷி ஆகிவிடும். வெயில் காலங்களில் மக்கள் வெளியில் சென்றாலே ஏதேனும் குளிர்பானத்தை வாங்கி ஒரு மடக்கு குடித்தால் தான் நிம்மதியாக உணர்வார்கள். அப்படி இருக்கையில் தரமான பழங்களை வைத்து ஜூஸ் கடை தொடங்கலாம். இன்றெல்லாம் வெவ்வேறு நகரங்களிலும் மாதுளை ஜூஸ் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த தொழில் தொடங்க பெரிய முதலீடு எதுவும் தேவையில்லை.
உங்களிடம் ஒரு பிரிட்ஜ், ஐஸ்கட்டிகளை அரைக்கும் நல்ல மிக்ஸி, பழங்களை வைக்கும் அளவுக்கு போதிய இடம் இருந்தால் போதுமானது. இந்த தொழிலை தொடங்கி லாபம் பார்க்க முடியும்.

கோடைகால பயிற்சி வகுப்புகள்: கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளை சமாளிக்க முடியாத பெற்றோர்கள் ஏதேனும் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்த்து விட வேண்டும் என்று தான் எண்ணுவர். இது ஒரு புறம் இருந்தாலும் தாங்களே படித்து ஏதேனும் கோர்ஸ்களை முடிக்க வேண்டும் என்று எண்ணும் மாணவர்களும் உள்ளனர். அப்படி இருக்கையில் கோடைகால பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.
இந்த வாய்ப்பு முக்கியமாக ஐடி தொழிலில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே பேசிக் புரோகிராமிங் லாங்குவேஜ் குறித்து தெரிந்திருக்கும். எந்த ஒரு டெவலப்பராக இருந்தாலும் அதற்கு அடிப்படை என்னவோ C லாங்குவேஜ் தான். எனவே இது போன்ற அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தரலாம்.
வீட்டிலேயே இருந்து ஒர்க் ப்ரம் ஹோம் செய்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். கூடுதல் வருமானம் பெற நினைத்தால் லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து இந்த தொழிலை தொடங்கலாம். பல ஊர்களில் லேப்டாப்-களை வாடகைக்கு விடுகின்றனர். அதுவே முதலீடு செய்து தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மூன்று முதல் நான்கு லேப்டாப்கள் இருந்தால் போதுமானது. அதன் பின் மாணவர்கள் சேர சேர மீண்டும் வாங்கிக் கொள்ளலாம்.
ஐஸ் கட்டிகள் தயாரித்தல்: கோடைகாலம் வந்தாலே ஐஸ் கட்டிகளின் தேவை விண்ணை முட்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கடைகள், உணவகங்கள், ஜூஸ் கடைகள், வீடுகள் என எல்லா இடங்களிலும் ஐஸ் கட்டிகள் அவசியம். எனவே ஐஸ்கட்டிகள் தயார் செய்ய மெஷின் வாங்கி விட்டால் போதும். சுத்தமான நீரை வைத்து ஐஸ் கட்டிகளை உருவாக்கலாம். அவற்றை எல்லா இடங்களுக்கும் விநியோகம் செய்யலாம்.
ஐஸ்கிரீம் பார்லர்கள்: ஐஸ்கிரீம்கள் கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்று. எனவே இந்த கோடை காலத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடையை தொடங்குவது நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம்களை தயாரித்தும் வழங்கலாம். வெவ்வேறு பழங்களை கொண்டு இயற்கை முறையில் ஐஸ்கிரீம்கள் செய்தால் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
சர்க்கரை மற்றும் செயற்கை நிறம் பயன்படுத்தாத உணவுப் பொருட்களுக்கு என்றுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். முன்பெல்லாம் உணவு தொடர்பான விழிப்புணர்வு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது தாங்கள் வாங்கும் உணவில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். எனவே இதுபோன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்கை நிறம் இல்லாத முற்றிலும் பழங்கள் மற்றும் இயற்கையான பொருட்களை வைத்து செய்யப்படும் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யலாம்.
இளநீர் விற்பனை: இளநீர் ஒரு சிறந்த இயற்கை பானம். ஆரோக்கியம் நிறைந்த இந்த இளநீருக்கு கோடை காலத்தில் தேவை அதிகமாக இருக்கும். உடலை குளிர்விக்கவும், தாகத்தை தணிக்கவும் மக்கள் இயற்கையான இளநீரை தேடித்தான் செல்வார்கள். மற்ற நாட்களை விட கோடை காலம் வந்துவிட்டால் இளநீர் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். எவ்வளவு இளநீர் கொண்டு வந்தாலும் ஓரிரு மணி நேரங்களில் விற்பனை செய்துவிட்டு வியாபாரிகள் வீட்டிற்கு சென்று விடுவார்கள். உங்கள் வீட்டில் தென்னந்தோப்பு இல்லை என்றாலும் உள்ளூர்களில் தென்னந்தோப்பு இருந்தால் அங்கிருக்கும் விற்பனையாளரிடம் மொத்தமாக வாங்கி இளநீர் விற்பனை செய்யலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள், பூங்காக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இளநீர் கடை அமைக்கலாம்.
தர்பூசணி பழங்கள்: தர்பூசணி பழங்களில் நீர் சத்து அதிகமாக உள்ளது. சீசனல் பழங்கள் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே கிடைக்கும். மற்ற நாட்களில் இவற்றைப் பார்க்க முடியாது. அப்படி கோடை காலங்களில் கிடைக்கும் ஒரு பழம் என்றால் அது தர்பூசணி. எனவே விற்பனையாளரிடம் மொத்தமாக தர்பூசணி பழங்களை பெற்று விற்பனை செய்யலாம். சிலர் தர்ப்பூசணி பழங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றில் உப்பு மற்றும் மிளகாய் பொடி போன்றவற்றை தூவி விற்பனை செய்கின்றனர். இப்படியும் செய்யலாம்.. அப்படி இல்லை என்றால் பீஸ் பீஸ்-ஆக வெட்டி விற்பனை செய்யலாம். சிலர் முழு பழங்களையும் வாங்கிச் செல்வார்கள். இதுவும் கோடை காலத்தில் தொடங்கக்கூடிய ஒரு சிறந்த தொழில்.
கோடைகால ஆடை விற்பனை: கோடைகாலத்தில் மக்கள் அணிவதற்கு வசதியான ஆடைகளை அதிகம் விரும்புவார்கள். காட்டன் ஆடைகள், லினன் ஆடைகள், மெல்லிய துணிகளை கொண்ட ஆடைகளுக்கு இந்த வெயில் காலத்தில் அதிக தேவை இருக்கும். எனவே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக நீங்கள் ஆடை விற்பனை செய்யலாம். ஆனால் நீங்கள் விற்பனை செய்யும் துணி 100 சதவீத சுத்தமான காட்டனா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற ஆடைகளை விற்பனை செய்யலாம். ஒரு வேலை உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தால் கடையை விரிவு படுத்தலாம். மொத்த விற்பனையாளர்கள் அல்லது ஆடை உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து மொத்தமாக ஆடையை பெற்று விற்பனையைத் தொடங்கலாம்.
மேலே கூறப்பட்டுள்ள பிசினஸ் ஐடியா அனைத்தும் அனைவருக்கும் ஏற்றதல்ல! மாறாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கானது மட்டுமே. அதுவும் சிலர் சீசனல் பிசினஸை அதிகம் விரும்புவார்கள். அப்படி இருப்பவர்கள் மேலே கூறப்பட்டுள்ள ஐடியாக்களை பயன்படுத்தலாம். இந்த பதிவை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு. எந்த ஒரு தொழிலை தொடங்க வேண்டுமானாலும் அதற்கு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications