பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு முன்பு பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுடைய பணம் லாக் செய்யப்படும்போது அதிகபட்ச வருமானத்தை வழங்கும் வங்கியைத் தேர்வு செய்வது முக்கியம். பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட் வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில் 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கைத் திறப்பது சாமர்த்தியமான முடிவாக இருக்கும். இது நீண்ட காலத்திற்கு அதிக வருமானத்தை பெற உதவும். உதாரணமாக ரூ.3 வருட பிக்சட் டெபாசிட்களில் ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு 1 சதவீத கூடுதல் வட்டி வழங்கப்பட்டாலும், அதற்கு ரூ.15,000 கூடுதல் வருமானம் கிடைக்கும். ஒரு வேலை நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், உங்களுடைய ரூ.15,000 வருமானம் இரட்டிப்பாகும்.

அதேபோல பல வங்கிகளும் நீண்ட கால பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறுகிய கால டெபாசிட்களுக்கு குறைந்த அளவிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. உதாரணமாக 6 மாத கால பிக்சட் டெபாசிட்கள் 2 வருட பிக்சட் டெபாசிட்களை விட குறைந்த வட்டி விகிதங்களையே வழங்குகிறது. 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
தனியார் வங்கிகளின் 3 வருட பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
HDFC பேங்க்: தனது 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த கட்டணங்கள் ஜூலை 2024 முதல் அமலில் உள்ளன.
ஐசிஐசிஐ பேங்க்: ஐசிஐசிஐ பேங்க் தனது 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா பேங்க்: கோடக் மஹிந்திரா பேங்க் பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த கட்டணங்கள் ஜூன் 14, 2024 முதல் அமலில் உள்ளன.
ஃபெடரல் பேங்க்: ஃபெடரல் பேங்க் 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதமும் மூத்த குடி மக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.
பொதுத்துறை வங்கிகளின் 3 வருட பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 3 வருடங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்குகிறது. இது தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ளன.
பேங்க் ஆப் பரோடா: பேங்க் ஆப் பரோடா 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த விகிதங்கள் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் அமலில் உள்ளன.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: பஞ்சாப் நேஷனல் பேங்க் அந்த 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது வாடிக்கையாளர்களுக்கு 6.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.20% வட்டி வழங்குகிறது


Click it and Unblock the Notifications