Uber-க்கு இந்தியாவில் புதிய நெருக்கடி.. ஆனாலும் வருமானத்திற்கு கை கொடுப்பது இந்தியா தான்..!

உபர் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) உபர் நிறுவனத்தின் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே ரிசர்வ் வங்கி, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மற்றும் இந்திய வரி அதிகாரிகளின் தீவிர ஆய்வுக்கு உட்பட்டது.

இருப்பினும் உலக நாடுகளில் உபர் சேவையை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசு பிரச்சனை கொடுத்தாலும் உபேருக்கு இந்தியர்கள் கைகொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் உபர் சேவை எத்தனை சதவீதம் என்பதை பார்ப்போம்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஸ்டேடிஸ்டா என்ற அமைப்பின் உலகளாவிய நுகர்வோர் கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஜெர்மனியில் 3 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 10 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் கடந்த 12 மாதங்களில் 14 சதவீதம் பேர் உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில், கணக்கெடுக்கப்பட்ட தகவலின்படி 18 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் உபர் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டில் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை 22 சதவீத மக்கள் உபர் டாக்சி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 29 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 42 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தினர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 43 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவுக்கு 2வது இடம்

மொத்த புள்ளிவிவரங்களின்படி உலகில் மிக அதிகமாக பிரேசில் நாட்டின் உபர் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதற்கு அடுத்தபடியாக உபர் சேவையை பயன்படுத்திய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+