நமது நாட்டில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருப்பது பிக்சட் டெபாசிட்கள் என்று சொல்லப்படுகிற FD-கள் தான். அதன் உறுதியான வருமானம், பல்வேறு நபர்களுக்கும் ஏற்ற கால அவகாசங்கள் ஆகியவற்றின் காரணமாக நம் நாட்டில் FD திட்டங்கள் பிரபலமாக உள்ளது. ஆனால் சமீபத்திய அறிக்கையில் வங்கிகளில் டெபாசிட் வரத்து குறைந்து கடன் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து டெபாசிட்களை ஈர்க்கும் பொருட்டு பல வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு போட்டி விகிதத்தில் FD திட்டங்களை வழங்குகின்றன. இதில் எந்த வங்கியைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் நபர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. இதில் 9 ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளில் FD திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி இந்த மாதம் 9-ஆவது முறையாக ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்துள்ளது. இதனால் பல வங்கிகளுக்கும் தங்கள் FD வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டின் காரணமாக, பல அரசு வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு சாதகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நாட்டில் உள்ள பல ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள் அரசாங்க வங்கிகளை விட தங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

AU ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 18 மாத காலம் கொண்ட FD-களுக்கு, 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 444 நாட்கள் கொண்ட FD-களுக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
EASF ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு, 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 365 நாட்கள் முதல் 1095 நாட்கள் வரையிலான FD-களுக்கு, 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 546 நாட்கள் முதல் 1111 நாட்கள் ரையிலான FD-களுக்கு, 9 சதவீதம்
சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 2 ஆண்டுகள் கொண்ட FD-களுக்கு, 8.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 12 மாதங்கள் கொண்ட FD-களுக்கு, 8.25 சதவீத வட்டி வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 1001 நாட்கள் கொண்ட FD-களுக்கு, 9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் FD-களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கியது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FD-களுக்கு 3 சதவீதம் முதல் 8.51 சதவீதம் வரை வட்டி வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, 7 முதல் 14 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 3 சதவீதமும், 15 முதல் 30 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களில் 4.50 சதவீதமும், 31 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 3.50 சதவீதமும் வழங்குகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications