சமீப காலமாக குறிப்பாக கோவிட் 19 தொற்று நோய்க்குப் பிறகு ஸ்டார்ட் அப் நடத்த வேண்டும் என்று விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பல தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவது கனவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் பட்ஜெட் பிரச்சனைதான். எனவே இந்தப் பதிவில் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான முதலீட்டில் தொடங்கக்கூடிய சில வணிக யோசனைகள் பற்றி பார்க்கவுள்ளோம்.
இதன் மூலம் பெரிய அளவிலான முதலீடுகள் ஏதுமின்றி தொழில் தொடங்க முடியும். தொழில் தொடங்குவதற்கு என்று அரசாங்கம் பல்வேறு லோன்களையும் வழங்குகிறது. இந்த லோன்களுக்கு வட்டி விகிதங்களும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக முத்ரா கடன்களை எடுத்துக் கொள்ளலாம். சாமானியர்களும் தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அரசாங்கமே குறைந்த வட்டியில் லோன் தருகிறது. நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இது போன்ற லோன்களையும் பரிசீலிக்கலாம்.

ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்கள்:
மளிகை கடை: ரூ.2,00,000 முதலீட்டிலேயே ஒரு மளிகை கடையைத் தொடங்கலாம். மளிகை பொருட்களுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருக்கும். ஆன்லைன் தளங்கள் அதிகரித்துவிட்டாலும் இன்னமும் மளிகை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் இருக்கின்றனர். எனவே நீங்கள் கடை திறக்கும் இடத்தை பொருத்தும் உங்களுடைய பிசினஸ் இருக்கும். மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களிலும், வீடுகள் அதிகம் உள்ள இடங்களிலும் மளிகை கடை திறக்கும் பட்சத்தில் உங்கள் முதலீட்டுக்கு நல்ல லாபம் பெறலாம்.
பேக்கரி: பேக்கரி கடை தொடங்குவதும் ரூ.2 லட்சம் முதலீட்டில் செய்யக்கூடிய வணிகம் ஆகும். 60 முதல் 70 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பேக்கரி தொடங்கலாம். கேக்குகள், பிஸ்கட்டுகள், பிரட்டுகள், கார வகைகள் போன்றவற்றை மலிவாக வழங்கி வாடிக்கையாளரின் வரவேற்பை பெற்றுவிட்டால் உங்கள் முதலீட்டுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.
ஆடை வியாபாரம்: உங்களிடம் இடம் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் துணி விற்பனை செய்யலாம். மேலும் ட்ரெண்டிங் ஆடைகளுக்கான தேவை அதிகமாகவே உள்ளது. எனவே ஆன்லைனில் துணிக்கடையை நடத்துவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். இன்றெல்லாம் பலரும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு விருப்பமான பொருளை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். இந்த விஷயத்தை கடைபிடித்து நீங்களும் மார்க்கெட்டிங் செய்யலாம்.
டாக்ஸி சேவை: உங்களிடம் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் இருந்தால் அதை உங்கள் வணிகத்திற்கு பயன்படுத்தலாம். அவற்றோடு ஓலா மற்றும் உபர் போன்ற ரைட் ஷேரிங் நிறுவனங்களுடன் சேர்ந்து உங்கள் வாகனத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். உங்களிடம் வாகனமே இல்லை என்றாலும் ரூ.2 ஏதேனும் வாகனத்தை வாங்கி லாபம் பார்க்கலாம்.
கேட்டரிங் சர்வீஸ்: நீங்கள் உணவுப் பிரியர் என்றாலோ அல்லது உணவு சமைப்பதில் ஆர்வமுடையவராக இருந்தாலோ கேட்டரிங் சேவையைத் தொடங்கலாம். ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறந்த வணிகம் இதுவாகும். தற்போது பணிக்கு செல்பவர்கள், ஊழியர்கள் என பலரும் கேட்டரிங் சேவையை நாடுகின்றனர். சில ஏரியாக்களில் டிபன் பாக்ஸ்களில் காலை உணவு, மதிய உணவு போன்றவற்றை சமைத்து டோர் டெலிவரி செய்கின்றனர், இதுபோன்ற சேவையை நல்ல தரத்துடனும் சுவையுடனும் வழங்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்று வருமானம் பார்க்கலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications