ஆள விடுங்கடா சாமி.. டிவிட்டரை கண்டு தெறித்து ஓடும் நிறுவனங்கள்.. ஏன்..?

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியதில் இருந்து பல முக்கியமான மாற்றங்களையும் செய்து வரும் நிலையில், கன்டென்ட் மாடரேஷன் அளவில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் டிவிட்டர் விளம்பரதாரர்களுக்கு எலான் மஸ்க் நிலைப்பாட்டுக்கு பல கேள்விகள் எழுப்பியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெறுவதற்கு மிகவும் முக்கியத் தளமாக இருப்பது சமூக வலைத்தளமாக உள்ளது.

இந்த நிலையில் கார்பரேட் நிறுவனங்கள் தாங்கள் விளம்பரம் செய்யும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்த நிலையில் எலான் மஸ்க் வந்த பின்பு டிவிட்டர் நிறுவனத்தில் விளம்பரம் செய்து வந்த பல முன்னணி நிறுவனங்கள் வெளியேறியும், தற்காலிகமாக நிறுத்தியும் உள்ளது. இதனால் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர்-க்கு வருவாய் அளவில் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது, தற்போதைய வர்த்தக மாடலில் டிலிட்டரின் வர்த்தகத்தில் விளம்பரம் வாயிலாகத் தான் அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வருகிறது.

free speech தளம்

free speech தளம்

எலான் மஸ்க் டிவிட்டரை free speech தளமாக மாற்ற வேண்டும் என அறிவித்து வருவது கார்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதேபோல் இந்தத் திட்டத்தைக் கைவிட எலான் மஸ்க்-கிற்குப் பல தரப்பில் அழுத்தம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், கட்டாயம் டிவிட்டரை free speech தளமாக மாற்றுவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

இந்த நிலையில் டிவிட்டர் தளத்தில் விளம்பரம் செய்வதைத் தற்காலிமாக நிறுத்திய நிறுவனங்களின் பட்டியில் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய அடுத்த நாளிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு விளம்பரம் செய்வதைத் தற்காலிமாக நிறுத்தியது. ஆனால் தற்போது துறை வாரியாக நிறுவனங்களைப் பட்டியல் போடும் அளவிற்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

ஜெனரல் மோட்டார்ஸ் கோ மற்றும் ஆடி வோக்ஸ்வேகன், லம்போர்கினி, பென்ட்லி, போர்ஷே போன்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் டிவிட்டரில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

உணவு மற்றும் மதுபானம்

உணவு மற்றும் மதுபானம்

Cheerios தயாரிக்கும் ஜெனரல் மில்ஸ் இன்க் , Annie's macaroni மற்றும் சீஸ் , Betty Crocker, Haagen-Dazs, ஓரியோ தயாரிக்கும் Mondelez International Inc, மதுபானம் தயாரிக்கும் நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் குழுமம் ஆகியவை டிவிட்டரில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்திய பெரிய நிறுவனங்களில் சில.

இதைத் தொடர்ந்து பார்மா நிறுவனமான Pfizer Inc, ஆடை ரீடைல் நிறுவனமான REI ஆகியவையும் இதில் சேர்ந்துள்ளது.

விளம்பரதாரர்கள்

விளம்பரதாரர்கள்

எலான் மஸ் கடந்த சில நாட்களாகப் பல்வேறு விளம்பரதாரர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், இதில் பலர் தங்களது விளம்பரங்கள் இடம்பெறும் இடத்தில் ஆபத்து அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் கண்டென்ட் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதைச் சரி செய்யும் பணியில் இறங்கியுள்ள மஸ்க் விளம்பரதாரர்களுக்குப் பாதுகாப்பான தளத்தை அளிப்பதில் உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு பேச்சு

வெறுப்பு பேச்சு

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதாக எலான் மஸ்க் அறிவித்த பின்பு டிவிட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சுக்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது எனச் சில ஆய்வுகள் கூறுகிறது. உதாரணமாக டிவிட்டர் தளத்தில் n-word பயன்பாடு 500 சதவீதம் அதிகரித்துள்ளது என Network Contagion Research Institute ஆய்வு தெரிவித்துள்ளது.

IPG அமைப்பு

IPG அமைப்பு

இதில் முக்கியமாக விளம்பர ஹோல்டிங் நிறுவனமான IPG தனது வாடிக்கையாளர்களை அடுத்த ஒரு வாரத்திற்கு டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. டிவிட்டர் தனது தளத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்த நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு புதிய விளம்பரத்தை செய்ய அறிவுறுத்தியுள்ளது. கோகோ கோலா போன்ற முன்னணி பிராண்டுகள் IPG நிறுவனத்துடன் இயங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+