ஜூன் 2020 காலாண்டில் உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி என்ன?

இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி, இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை மற்றும் லாக் டவுன் கட்டுப்பாடுகள் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஜூன் 2020 காலாண்டில் உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி என்ன?

1996-ம் ஆண்டில் இருந்து இந்தியா, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஜிடிபி தரவுகளை வெளியிடுகிறது. 1996-ம் ஆண்டில் இருந்து, இப்போது வரை வெளியான இந்திய ஜிடிபி காலாண்டு தரவுகளிலேயே, இந்த ஜூன் 2020 காலாண்டு ஜிடிபி தான் மிகவும் மோசமானது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

உலகின் முன்னணி பொருளாதாரங்களின் ஜிடிபி, இந்த ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டில் எவ்வளவு சரிந்து இருக்கிறது என, இந்தியா டுடே தன் வலை தளத்தில் சில தரவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

உலகின் முன்னணி பொருளாதாரங்களில், சீனா மட்டுமே, ஜூன் 2020 காலாண்டில் 3.2 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி கண்டு இருக்கிறது. மற்ற முன்னணி பொருளாதாரங்கள் எல்லாமே, ஜூன் 2020 காலாண்டில் ஜிடிபி வீழ்ச்சி கண்டு இருக்கின்றன.

தேனீக்களைப் போல சுறு சுறுப்பாக இயங்கும் ஜப்பானியர்களின் பொருளாதாரமே, இந்த ஜூன் 2020 காலாண்டில் 7.6 % இறக்கம் கண்டு இருக்கிறது.

ஜெர்மனி, இந்த ஜூன் 2020 காலாண்டில் 10.1 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

கனடா நாட்டு பொருளாதாரம் 12.0 % ஜிடிபி சரிந்து இருக்கிறது.

இத்தாலியின் பொருளாதாரம் ஜூன் 2020 காலாண்டில் 12.4 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டு பொருளாதாரம் இந்த ஜூன் 2020 காலாண்டில் 13.8 % சரிந்து இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டுப் பொருளாதாரம், இந்த ஜூன் 2020 காலாண்டில் 20.4 % ஜிடிபி வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது.

இந்தியா, ஜூன் 2020 காலாண்டில், உலகின் முன்னணி பொருளாதாரங்களிலேயே, மிகப் பெரிய ஜிடிபி வீழ்ச்சியைக் கண்ட இரண்டாவது நாடாக இருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் 23.9 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, கடந்த ஜூன் 2020 காலாண்டில் 32.9 சதவிகிதம் (Annual rate) என மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது.

ஆக கொரோனா இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் அசைத்துப் பார்த்து இருக்கிறது என்பது இந்த தரவுகள் வழியாக, தெளிவாகத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+