அச்சச்சோ... எப்படிப் பார்த்தாலும் இந்திய ஜிடிபி தான் அதிகம் சரிஞ்சிருக்கு!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரல் 2020 - மார்ச் 2021 வரைக்குமான நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2020) இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

1996-ம் ஆண்டில் இருந்து, இப்போது வரை வெளியான இந்திய ஜிடிபி காலாண்டு தரவுகளிலேயே, இந்த ஜூன் 2020 காலாண்டில் தான், இந்தியப் பொருளாதாரம், மிக மோசமாக 23.9 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறதாம்.

இந்திய பொருளாதாரம், இதுவரை வரலாறு காணாத அளவுக்கு சரிந்து இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஜூன் 2020 காலாண்டில், உலகின் டாப் பொருளாதாரங்களிலேயே பெரிய சரிவை கண்டிருப்பது இந்தியா தான் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவின் மின் உற்பத்தி & பகிர்மான பொருட்கள் கம்பெனி பங்குகள் விவரம்!இந்தியாவின் மின் உற்பத்தி & பகிர்மான பொருட்கள் கம்பெனி பங்குகள் விவரம்!

எதைப் பார்க்கப் போகிறோம்

எதைப் பார்க்கப் போகிறோம்

கடந்த சில நாட்களாகவே, இந்தியாவின் ஜிடிபி தான், உலகின் டாப் பொருளாதாரங்களில் அதிகம் சரிந்து இருக்கிறது அல்லது சரியவில்லை, என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து இருக்கின்றன. இதற்கு எல்லாம் தீர்வு காணும் விதத்தில், பிசினஸ் டுடே வலை தளம் சில தரவுகள் வெளியிட்டு இருக்கின்றன. அந்த தரவுகளைத் தான் நாம் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிரோம்.

ஜூன் 2019 Vs ஜூன் 2020

ஜூன் 2019 Vs ஜூன் 2020

கடந்த ஜூன் 2019 காலாண்டுடன், இந்த ஜூன் 2020 காலாண்டை ஒப்பிட்டால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இந்தியா தான் மிகப் பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Year on Year comparison என்பார்கள்.

  • இந்தியா -23.9 %
  • இங்கிலாந்து -21.7 %
  • பிரான்ஸ் -18.9 %
  • இத்தாலி -17.7 %
  • கனடா -13.0 %
  • ஜெர்மனி -11.3 %
  • ஜப்பான் -9.9 %
  • அமெரிக்கா -9.1 %

என பல நாட்டு பொருளாதாரங்கள் தரை தட்டி இருக்கின்றன. சீனா மட்டுமே 3.2 % வளர்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் டுடேவின் தரவுகள்.

மார்ச் 2020 Vs ஜூன் 2020
 

மார்ச் 2020 Vs ஜூன் 2020

கடந்த மார்ச் 2020 காலாண்டுடன், இந்த ஜூன் 2020 காலாண்டை ஒப்பிட்டாலும், இந்தியா தான் பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Quarter On Quarter Comparison என்பார்கள்.

  • இந்தியா -29.28 %
  • இங்கிலாந்து -20.4 %
  • பிரான்ஸ் -13.8 %
  • இத்தாலி -12.8 %
  • கனடா -11.5 %
  • ஜெர்மனி -9.7 %
  • அமெரிக்கா -9.09 %
  • ஜப்பான் -7.8 %

என சரிந்து இருக்கின்றன. இந்த ஒப்பீட்டில் சீனா 11.5 % வளர்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் டுடேவின் டேட்டா.

Annualised GDP

Annualised GDP

ஒரு குறிப்பிட்ட காலாண்டில் வரும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை மொத்த ஆண்டுக்கும் கணக்கிட்டால் அது தான் Annualised GDP என்பார்களாம்.
இந்த அடிப்படையில் கணக்கிட்டால் கூட இந்திய பொருளாதாரம் 75 % வீழ்ச்சி காணும் என்கிறது பிசினஸ் டுடே.

  • இங்கிலாந்து -59.9 %
  • பிரான்ஸ் -44.8 %
  • இத்தாலி -42.2 %
  • கனடா -38.7%
  • ஜெர்மனி -33.5 %
  • அமெரிக்கா -31.7 %
  • ஜப்பான் -27.8 %

அளவுக்கு சரியலாம் என்கிறது பிசினஸ் டுடே தரவுகள்.

இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

ஆக எப்படிப் பார்த்தாலும், பிசினஸ் டுடே சொல்லி இருக்கும் தரவுகள் படிப் பார்த்தால், உலகின் டாப் பொருளாதாரங்களிலேயே, இந்தியாவின் ஜிடிபி தான் மிகவும் மோசமாக அடி வாங்கி இருக்கிறது. இனி வரும் காலாண்டுகளில், இந்தியாவில், வியாபாரமும் வர்த்தகமும் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால், இந்திய பொருளாதாரத்தின் நிலை மேம்படலாம். மேம்படும் என்று நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Economies GDP comparison QoQ comparison YoY comparison Annualized rate comparison

As per Business Today data, we have compared the top economies GDP in Quarter on Quarter, Year on Year, Annualized rate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X