சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்ய ஆசைப்படுகின்றனர். குறுகிய கால அவசர தேவைகளுக்கான நிதியை உருவாக்க, இந்த குறுகிய கால FD திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த FD திட்டங்கள் சிறந்த வட்டி வருமானத்தையும் வழங்குகின்றன. அந்த வகையில் 15 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 10 வங்கிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது சில வங்கிகள் ஸ்பெஷல் FD-களையும் அறிமுகம் செய்கின்றன. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் ஒரு திட்டம் ஆகும். IDBI பேங்க், இந்தியன் பேங்க் மற்றும் பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய மூன்று முன்னணி பேங்குகளின் சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த சிறப்பு FD திட்டங்கள் 8 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்த சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்ய ஜூன் 30 வரை வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் உள்ளது. சரி தற்போது FD திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள் குறித்து பார்ப்போம்.

கனரா பேங்க்: கனரா பேங்க் 444 நாள் முதிர்பு காலத்துடன் கூடிய FDகளுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், இந்த வங்கியும் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் இந்தியன் பேங்க்: இந்த இரண்டு வங்கிகளும் 400 நாள் FD திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 399 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய FDகளுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ICICI பேங்க்: இந்த பேங்க் 15 மாத FDகளுக்கு 7.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. தற்போது தனியார் வங்கி வழங்கும் சிறந்த வட்டி விகிதம் இதுவாகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: ஸ்டேட் பேங்க் 400 நாள் முதிர்வு காலத்துடன் கூடிய FDகளுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
HDFC பேங்க்: இந்த பேங்க் 15 மாத முதிர்வு காலத்துடன் கூடிய FD திட்டங்களுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது.
பேங்க் ஆப் பரோடா: 360 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய FD-களுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 12 மாத கால அவகாசம் கொண்ட FDகளுக்கான வங்கியின் வட்டி விகிதம் 6.8 சதவீதம்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications