நிலையான வைப்புத் தொகை என்று அழைக்கப்படுகிற FD-கள் நம் நாட்டு மக்களிடையே பிரபலமான முதலீட்டுத் திட்டமாகும். இதில், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் செலுத்தி, அவ்வப்போது அல்லது முதிர்வின் போது வட்டி வருமானத்தைப் பெறலாம். சந்தை அபாயங்கள் இல்லாமல் FD-கள் வருமான உத்தரவாதத்தையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன. இந்தப் பதிவில் FD திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதத்தைப் பார்ப்போம்.
குறுகிய கால நிதி இலக்குகளை அடைவதற்கும், அவசர செலவுகளுக்கு பயன்படுத்தவும் மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கும் FD திட்டங்கள் சிறந்தத் தேர்வாக இருக்கும்.

FD திட்டங்கள் பொதுவாக சிறு சேமிப்பு திட்டங்களை விடவும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது, குறைந்த அபாயத்தில் தங்கள் சேமிப்பை வளர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு அம்சமாகும்.
இருப்பினும், FD திட்டங்களில் முதலீடு செய்யும் போது சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். இதனை மீறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எனவே முதலீடு செய்வதற்கு முன்பு இது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து கேட்டறியவும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளின் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்:
பஞ்சாப் நேஷனல் பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.75%
3 வருட காலம் FD திட்டம்: 7.00%
5 வருட காலம் FD திட்டம்: 6.50%
HDFC பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.60%
3 வருட காலம் FD திட்டம்: 7.15%
5 வருட காலம் FD திட்டம்: 7.20%
ICICI பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.20%
1 வருட காலம் FD திட்டம்: 6.70%
3 வருட காலம் FD திட்டம்: 7.00%
5 வருட காலம் FD திட்டம்: 7.00%
கனரா பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.85%
3 வருட காலம் FD திட்டம்: 6.80%
5 வருட காலம் FD திட்டம்: 6.70%
ஆக்சிஸ் பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.20%
1 வருட காலம் FD திட்டம்: 6.70%
3 வருட காலம் FD திட்டம்: 7.10%
5 வருட காலம் FD திட்டம்: 7.00%
பேங்க் ஆஃப் பரோடா:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.85%
3 வருட காலம் FD திட்டம்: 7.25%
5 வருட காலம் FD திட்டம்: 6.50%


Click it and Unblock the Notifications