இந்தியாவில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான வேலைகளில் தற்போது திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல முன்னணி நிறுவனங்கள், புதிய பணியாளர்களுக்கு கூட, ஆரம்ப சம்பளமாகவே மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் ஊதியம் வழங்க தயாராக உள்ளன.
நிறுவனங்களை வாங்குவது, விற்பது, டிஜிட்டல் நிதிச் சேவைகள் மற்றும் நிதி அபாயங்களை நிர்வகித்தல் போன்ற துறைகள் வேகமாக விரிவடைந்து வருவதால், அனுபவமும் திறமையும் உள்ளவர்களை தேடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

முதலீட்டு வங்கி :முதலீட்டு வங்கி என்பது, பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் செல்வந்தர்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் துறையாகும். இங்குப் பணிபுரிபவர்கள், நிறுவனங்கள் நிதி திரட்ட உதவுவது, மற்ற நிறுவனங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற முக்கியமான வர்த்தகங்களை செய்து முடிப்பது மற்றும் பங்குச் சந்தையில் புதிய பங்குகளை அறிமுகப்படுத்துவது போன்ற பல பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், நிறுவனங்களின் மதிப்பைத் தீர்மானிப்பது, நிதி வர்த்தகங்களுக்கான திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். வேலை கடினமானதாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.
இதில், முக்கியப் பணியிடங்களான நிறுவன இணைப்பு ஆய்வாளர் (M&A Analyst) மற்றும் வர்த்தக ஆலோசகர் (Deal Advisor) ஆகிய இரண்டு பதவிகளுக்கும் ஆண்டிற்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பளம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கான நிதி மாதிரிகளை உருவாக்கும் நிதி மாடலர் (Financial Modeler) என்ற பணிக்கு ஆண்டிற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது.
ஃபின்டெக் மற்றும் நிதிப் பகுப்பாய்வு : ஃபின்டெக் துறை (நிதி மற்றும் தொழில்நுட்பம்) இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. மொபைல் மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைனில் கடன் வழங்குதல் மற்றும் டிஜிட்டல் முறையில் முதலீடுகளை நிர்வகித்தல் போன்ற சேவைகளை மேம்படுத்த இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தப் பணிகளுக்கு, நிதி விதிகளும் டிஜிட்டல் கருவிகளும் தெரிந்த ஆட்களை தேவை. இந்த இரட்டை திறமை குறைவாகவே இருப்பதால், ஃபின்டெக் நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை எடுக்கின்றன.
அதன்படி, டேட்டா ஆய்வாளர் மற்றும் நிதி ஆய்வாளருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும், குவாண்ட் ஆய்வாளருக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும், ஃபின்டெக் தயாரிப்பு ஆய்வாளருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
நிதி அபாயங்களை குறைக்கும் சிறப்புப் பணி : இதன் முக்கியப் பணி, நிறுவனத்துக்கு வரக்கூடிய நிதி அபாயங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, அதன் விளைவுகளை ஆய்வு செய்வது மற்றும் அந்த அபாயங்களை தவிர்ப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா என்று முடிவெடுக்க உதவுவது ஆகும். சந்தை நிலவரங்கள் மாறும்போது அபாயங்களும் மாறுவதால், இந்த வேலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, தங்கள் முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த இடர் குழுக்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள், ஆரம்பத்தில் இருந்தே அதிக சம்பளம் வழங்குகின்றன.
அதன்படி, குவாண்ட் ரிஸ்க் ஆய்வாளருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையும், சந்தை இடர் ஆய்வாளருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும், கடன் இடர் ஆய்வாளருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் நிதிச் சந்தை மென்மேலும் நவீனமாகி வருவதால், பகுப்பாய்வுத் திறன், நிதிச் சந்தை அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் கொண்டவர்களுக்கு இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications