சென்னை: வங்கிகள் பொதுவாகவே வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்களில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கின்றன. அதன்படி நாட்டில் உள்ள 10 ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளால் வழங்கப்படும் சிறந்த பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்
ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளில், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்களில் ஆண்டுக்கு 9.50 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகள் பொதுவாகவே மற்ற வாடிக்கையாளர்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி மற்றும் basic points போன்ற சிறப்பு சலுகைகளை வழங்கும். அதேபோல் இது போன்ற வங்கிகள், அவ்வப்போது சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களையும் மூத்த குடிமக்களுக்கு என்று பிரத்யேகமாக அறிமுகம் செய்கின்றன.

அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளில் FD திட்டங்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.5% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5 % வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வழங்கும்: ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கில், மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8.25 % வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் எனில் 50 bps அடிப்படையில் கூடுதல் வட்டி பெற முடியும்.
SBM பேங்க்: SBM பேங்க் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.75 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதே போல் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வரி சேமிப்பு FD-களில் ஆண்டுக்கு 7.75% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுக்கான FD திட்டத்தில், ஆண்டுக்கு 8.25 % வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: இந்த பேங்க், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.15 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. பிற வாடிக்கையாளர்களுக்கு FD-களில் ஆண்டுக்கு 8.65 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: இந்த பேங்கில், பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5 % வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9 % வரையிலும் FD திட்டத்திற்கு வட்டி வழங்கப்படுகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: இங்கு மற்ற வாடிக்கையாளர்களுக்கான FD திட்டங்களில் ஆண்டுக்கு 8.5 % வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9 % வரையிலும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
RBL ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: RBL பேங்க் மற்ற வாடிக்கையாளர்கள் எனில், FD திட்டங்களுக்கு ஆண்டுக்கு 8 % வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 bps கூடுதலாக வழங்கப்படுகிறது.
சிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: இந்த பேங்க், பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.55 % வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.05 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: இங்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5 % வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9 % வரையிலும் FD திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications