Top Gainers 2021: 'இந்த' பங்குகளில் முதலீடு செய்திருந்தால் பல மடங்கு லாபம்.. 2021ல் இதுதான் டாப்பு!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான முதலீட்டு வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை, கடந்த ஒருமாதமாகச் சந்தையில் அதிகளவிலான தடுமாற்றம் இருந்தாலும், 2021ஆம் ஆண்டில் அதிகப்படியான வளர்ச்சியை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பதிவு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு வர்த்தகத்தில் சென்செக்ஸ் தனது வரலாற்று உச்ச அளவான 62,245.43 புள்ளிகளை அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அடைந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்தது.

Top Gainers 2021: 'இந்த' பங்குகளில் முதலீடு செய்திருந்தால் பல மடங்கு லாபம்.. 2021ல் இதுதான் டாப்பு!

ஆனால் இதேநேரத்தில் பங்குச்சந்தை எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்ப பயத்தையும் ஏற்படுத்தியது மறுக்க முடியாது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்த டாப் 20 நிறுவனங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாடிக்கையாளர்களுக்காகத் தொகுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை (10-12-2021) வர்த்தக முடிவை அடிப்படையாகக் கொண்டு 09-12-2020 விலை நிலவரத்தை ஒப்பிட்டு மும்பை பங்குச்சந்தையில் டாப் 200 நிறுவனங்களில் அதிகம் லாபத்தைக் கொடுத்த டாப் 20 நிறுவனங்களின் விபரம் இதோ...

BSE 200 இன்டெக்ஸ்

  • JSW எனர்ஜி பங்கு விலை 65 ரூபாயில் இருந்து 362% உயர்ந்து, தற்போது 300.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை 426.65 ரூபாயில் இருந்து 338% உயர்ந்து, தற்போது 1869.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்கு விலை 28 ரூபாயில் இருந்து 297% உயர்ந்து, தற்போது 109.05 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ரிலையன்ஸ் பவர் பங்கு விலை 4 ரூபாயில் இருந்து 259% உயர்ந்து, தற்போது 14.09 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டாடா மோட்டார்ஸ் - டி.வி.ஆர் பங்கு விலை 76 ரூபாயில் இருந்து 239% உயர்ந்து, தற்போது 258.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • மைண்ட்ட்ரீ லிமிடெட் பங்கு விலை 1,456 ரூபாயில் இருந்து 214% உயர்ந்து, தற்போது 4576.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டாடா பவர் பங்கு விலை 73 ரூபாயில் இருந்து 211% உயர்ந்து, தற்போது 227.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • L&T டெக்னாலஜி சர்வீசஸ் பங்கு விலை 1,840 ரூபாயில் இருந்து 191% உயர்ந்து, தற்போது 5362.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 182.7 ரூபாயில் இருந்து 171% உயர்ந்து, தற்போது 494.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • வேதாந்தா பங்கு விலை 143.65 ரூபாயில் இருந்து 143% உயர்ந்து, தற்போது 349.75 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • எம்பாசிஸ் பங்கு விலை 1,316 ரூபாயில் இருந்து 138% உயர்ந்து, தற்போது 3133.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • நேஷ்னல் அலுமினியம் பங்கு விலை 42 ரூபாயில் இருந்து 135% உயர்ந்து, தற்போது 98.95 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • செஞ்சுரி டெக்ஸ்டைல் & இந்தியா பங்கு விலை 390 ரூபாயில் இருந்து 117% உயர்ந்து, தற்போது 845.9 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • HEG பங்கு விலை 844 ரூபாயில் இருந்து 116% உயர்ந்து, தற்போது 1826.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • அப்பல்லோ மருத்துவமனை பங்கு விலை 2441.15 ரூபாயில் இருந்து 115% உயர்ந்து, தற்போது 5243.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • அதானி பவர் பங்கு விலை 49 ரூபாயில் இருந்து 111% உயர்ந்து, தற்போது 104.1 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • SAIL பங்கு விலை 55 ரூபாயில் இருந்து 105% உயர்ந்து, தற்போது 112.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • எல்&டி இன்ஃபோடெக் பங்கு விலை 3,267 ரூபாயில் இருந்து 103% உயர்ந்து, தற்போது 6619.4 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டி.எல்.எஃ பங்கு விலை 212.05 ரூபாயில் இருந்து 97.69% உயர்ந்து, தற்போது 419.2 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • பஜாஜ் ஃபின்சர்வ் பங்கு விலை 9008.3 ரூபாயில் இருந்து 96.74% உயர்ந்து, தற்போது 17723 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • மேலும் மொத்த மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை (10-12-2021) வர்த்தக முடிவை அடிப்படையாகக் கொண்டு 09-12-2020 விலை நிலவரத்தை ஒப்பிட்டு அதிகம் லாபத்தைக் கொடுத்த டாப் 20 நிறுவனங்களின்
  • விபரம் இதோ...
  • உஷ்தேவ் இன்டர்நேஷனல் பங்கு விலை 0.19 ரூபாயில் இருந்து 2526.32% உயர்ந்து, தற்போது 4.99 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • எக்ஸ்ப்ரோ இந்தியா பங்கு விலை 36.05 ரூபாயில் இருந்து 2508.18% உயர்ந்து, தற்போது 940.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 3I இன்ஃபோடெக் பங்கு விலை 4.36 ரூபாயில் இருந்து 2207.34% உயர்ந்து, தற்போது 100.6 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டாடா டெலி சர்வீஸ் பங்கு விலை 8.31 ரூபாயில் இருந்து 1692.42% உயர்ந்து, தற்போது 148.95 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ஆட்டோமொட். ஸ்டாம்ப் & அசெம் பங்கு விலை 27.15 ரூபாயில் இருந்து 1064.46% உயர்ந்து, தற்போது 316.15 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கோல்ட்ஸ்டோன் டெக்னாலஜி பங்கு விலை 9.87 ரூபாயில் இருந்து 980.04% உயர்ந்து, தற்போது 106.6 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • லாயிட்ஸ் ஸ்டீல்ஸ் பங்கு விலை 1.14 ரூபாயில் இருந்து 957.02% உயர்ந்து, தற்போது 12.05 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ஜிண்டால் போட்டோ பங்கு விலை 26.9 ரூபாயில் இருந்து 931.60% உயர்ந்து, தற்போது 277.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ஜெய்கே எண்டர்பிரைசஸ் பங்கு விலை 5.9 ரூபாயில் இருந்து 792.37% உயர்ந்து, தற்போது 52.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • SEL உற்பத்தி பங்கு விலை 2.39 ரூபாயில் இருந்து 784.94% உயர்ந்து, தற்போது 21.15 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • SE பவர் பங்கு விலை 2.7 ரூபாயில் இருந்து 761.11% உயர்ந்து, தற்போது 23.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • நஹர் ஸ்பின்னிங் மில்ஸ் பங்கு விலை 58.05 ரூபாயில் இருந்து 736.26% உயர்ந்து, தற்போது 485.45 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • Olectra கிரீன்டெக் பங்கு விலை 101.6 ரூபாயில் இருந்து 663.29% உயர்ந்து, தற்போது 775.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ரத்தன்இந்தியா இன்ஃப்ரா பங்கு விலை 6.76 ரூபாயில் இருந்து 647.78% உயர்ந்து, தற்போது 50.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • Almondz குளோபல் செக் பங்கு விலை 16.57 ரூபாயில் இருந்து 632.05% உயர்ந்து, தற்போது 121.3 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • டிலிஜென்ட் மீடியா கார்ப் பங்கு விலை 0.44 ரூபாயில் இருந்து 620.45% உயர்ந்து, தற்போது 3.17 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • இந்தோ தாய் செக்யூரிட்டீஸ் பங்கு விலை 22.25 ரூபாயில் இருந்து 618.43% உயர்ந்து, தற்போது 159.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • பால்ரெட் டெக்னாலஜிஸ் பங்கு விலை 32.95 ரூபாயில் இருந்து 569.20% உயர்ந்து, தற்போது 220.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • சரிகம இந்தியா பங்கு விலை 758.4 ரூபாயில் இருந்து 565.68% உயர்ந்து, தற்போது 5048.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • குறிப்புகள் இண்ட்ஸ். பங்கு விலை 269.5 ரூபாயில் இருந்து 533.97% உயர்ந்து, தற்போது 1708.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+