சென்னை: கூடுதல் வருமானம் பெறுவது பற்றி நம்மில் பலரும் சிந்தித்திருப்போம். இதற்கான காரணம் மாத சம்பளக்காரர்களாக இருந்தால், அவர்களுடைய சம்பளம் மாதத்தின் 20ஆம் தேதிக்குள் காலியாகிவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவர் கூடுதல் வருமானத்தை பற்றி யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பலரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உழைத்து சம்பளத்தை பெறுகின்றனர். ஆனால் அவ்வாறு பெறும் சம்பளம் பாதியிலேயே தீர்ந்து போகும் பட்சத்தில், கூடுதல் வருமானத்தை சம்பாதிக்கும் வழிகளைத் தேடுகின்றனர். சிறிது நேரம் ஒதுக்கி சில எளிய டிப்ஸ்களைப் பின்பற்றினால் போதும், உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் பணத்தை நிரப்பலாம்.
ஆன்லைன் கல்வி: உங்களுக்கு தெரிந்த பாடத்தைப் பற்றி பிறருக்கு சொல்லிக் கொடுக்கலாம். ஆன்லைனில் சொல்லிக் கொடுத்து நீங்கள் கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும். இதற்கு நீங்கள் முழு நேரம் ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாலை நேரங்களிலோ அல்லது உங்களுக்கு எந்த நேரம் வசதியாக உள்ளதோ, அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அஃபிலியேட் மார்க்கெட்டிங்: அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கும். பல இ-காமர்ஸ் தளங்களும் தங்களுடையப் பொருட்களை விற்று கொடுக்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும். உதாரணமாக, நீங்கள் அமேசான் அஃபிலியேட் மார்க்கெட்டிங் செய்யலாம். அதற்கு, நீங்கள் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து வைத்திருந்தால் போதுமானது. நீங்கள் அனுப்பும் லிங்கை வைத்து பிறர் எந்த பொருள் வாங்கினாலும் உங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும். இதற்காக நீங்கள் எந்தவிதமான செலவும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பிரபல யூ டியூபர்கள் மற்றும் இன்புளுயன்சர்கள் பணம் ஈட்டப் பயன்படுத்தும் முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று. நீங்கள் சில சமயங்களில் இன்ஸ்டாகிராமில் பார்த்திருக்கலாம். இது போன்ற நபர்கள் ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்தி ரிவியூக்களை கூறுவது போல கூறி, DM-இல் லிங்க் இருப்பதாகக் கூறுவார்கள். இது அஃபிலியேட் லிங்க் எனப்படுகிறது. இந்த லிங்கை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, அந்தந்த நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை கிடைக்கும்.
ஆன்லைன் விற்பனை: தங்கள் தயாரிப்புகளை சோசியல் மீடியா பக்கங்களில் மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்பவர்கள் தற்போது அதிகரித்து விட்டனர். வீட்டில் தயாரிக்கப்படும் வடகம் முதல் கைவினைப் பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற தொழில் உங்களிடம் இருந்தால் நீங்களும் உங்கள் தயாரிப்புகளை, ஆன்லைனில் சந்தைப்படுத்தலாம். தற்போது அனைவரிடமும் ஆண்ட்ராய்ட் மொபைல் உள்ளதால், உங்களுடைய தயாரிப்புகள் எளிதில் மக்களை சென்றடையும்.
ஓய்வு நேர வேலை: பல நிறுவனங்களும் பகுதிநேர அல்லது ஓய்வு நேர வேலைகளுக்கு ஆட்களைத் தேடுகின்றனர். உங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்ற நிறுவனங்களின் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆனால் இது போன்ற நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருக்கலாம். அதற்கு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களைப் பயன்படுத்தலாம். தற்போது வேலை தருவதாக கூறி மோசடி செய்வது அதிகரித்துள்ளதால் ஜாக்கிரதையாக உங்கள் தேடலைத் தொடங்குங்கள்.
ப்ரீலான்ஸ் வேலைகள்: உங்களுக்கு எழுதுதல், டிசைனிங், படம் எடுத்தல், வெப்சைட் டெவெலப்மென்ட் போன்ற திறமைகள் இருந்தால் வீட்டிலிருந்தே ப்ரீலான்ஸ் வேலைகளை செய்யலாம். இதற்கு அங்கீகரிப்பட்ட தளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக எளிதில் பணம் ஈட்டலாம்.


Click it and Unblock the Notifications