இந்திய ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் வாங்கும் சம்பளத்திற்கும், மற்ற துறைகளில் பணிபுரியும் நபர்கள் வாங்கும் சம்பளத்திற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் ஐடி கம்பெனியில் பணியில் இருக்கும் நபர்கள் பெற்ற சம்பளம் அனைவரும் வியக்கும்படி தான் உள்ளது.
ஊழியர்களுக்கே 50 ஆயிரம் முதல் பல லட்சம் வரை ஊதியம் தரும் ஐடி நிறுவனங்கள் அதன் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் சிஇஓ-க்களுக்கு சாதாரணமாகவா சம்பளம் கொடுப்பார்கள்.
அதிலும் விப்ரோ, ஹெச்சிஎல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் என பல ஐடி நிறுவனங்களில் சிஇஓக்களுக்கு கொடுக்கும் சம்பளம் பற்றி இங்கு பார்க்கலாம்.
சி விஜயகுமார் (HCL – CEO)
ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (HCL Tech) கடந்த ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.விஜயகுமாருக்கு நிறுவனம் ரூ.123.13 கோடி (16.52 மில்லியன் டாலர்) ஊதியமாக வழங்கியதாக வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இவர் 2 மில்லியன் அமெரிக்க டாலரை variable pay ஆகவும், 0.02 மில்லியன் perquisites சலுகைகளுடன் பெறுவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
தியரி டெலாபோர்ட் (Wipro CEO)
தியரி டெலாபோர்ட் ஜூலை 2020 இல் விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2022 நிதியாண்டில் (FY22) ரூ.79.8 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பளம் பெரும் சிஇஓக்களின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சலில் பரேக் (Infosys CEO)
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சலில் பரேக், இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் மூன்றாவது CEO ஆவார். இவர் 2022 (FY22) இல் ரூ.71.02 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
சிபி குர்னானி (Tech Mahindra CEO)
டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி 2022 இல் ரூ. 63.4 கோடி ஊதியம் பெற்றுள்ளார். அவர் அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2021 இல் வாங்கிய சம்பளத்துடன் ஒப்பிடுகையில் 2022 189 சதவீதம் உயர்வுடன் சம்பளம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, இன்ஃபோசிஸின் மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திராவில் சிபி குர்னானிக்குப் பதிலாக CEO பதவிக்கு வரவிருக்கிறார்.
ராஜேஷ் கோபிநாதன் (TCS Ex-CEO)
இந்தியாவில் ஐடி நிறுவனத்தில் ஐந்தாவதாக அதிக ஊதியம் பெறும் CEO க்களின் பட்டியலில் ராஜேஷ் கோபிநாதன் இடம்பெற்றுள்ளார். 2021-22 இல் ரூ. 25.75 கோடி Compensation ஆக பெற்றுள்ளார். மேலும் 2022 இல் இவரது சம்பள விகிதம் 26.6% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய சிஇஓ கிருதிவாசன் சம்பளம் இந்த வருடம் டிசிஎஸ் நிறுவனம் பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கும் அறிக்கையின் போது தான் தெரியும்.
2023 ஆம் நிதியாண்டுக்கான சம்பளம்
இதேபோல் மார்ச் மாதத்திற்கு பின்பு அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான அப்ரைசல் பணிகளை முடித்த பின்பு சிஇஓ-க்களின் 2023 ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தை அறிவிக்கும். அப்போது டிசிஎஸ் முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் மற்றும் புதிய சிஇஓ கே கிருதிவாசன் ஆகியோரின் சம்பளத்தையும் அறிவிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications