பொருளாதார நிச்சயமற்ற சூழலில், பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கலாம். வருமானம் ஈட்டுவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்று பிக்சட் டெபாசிட்களில் (Fixed Deposits) முதலீடு செய்வது. இந்தப் பதிவில், பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்வதன் மூலம், அதிக வட்டி விகிதங்களின் பலனை அடைய முடியும். டெபாசிட் கால அளவு அதிகரிக்கும் போது, வட்டி விகிதம் அதிகரிக்கும். குறைந்த கால டெபாசிட்களுக்கு குறைவான வட்டி விகிதம் கிடைக்கும்.

பஞ்சாப் நேஷனல் பேங்க்: பஞ்சாப் நேஷனல் பேங்கின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவிகிதம் ஆகும். 3 வருட FD டெபாசிட்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 7.75 சதவிகிதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
HDFC பேங்க்: அதே நேரத்தில், HDFC பேங்க், தனது 3 வருட FD டெபாசிட்களில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதத்தையும் வழங்குகிறது.
ICICI பேங்க்: ICICI பேங்க் 3 வருட FD டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடா பொது வாடிக்கையாளர்களாக இருந்தால் ஆண்டுக்கு 6.75 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): SBI பொது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் அதன் 3 வருட FD டெபாசிட்டுகளுக்கு இதே வட்டி விகிதத்தை தான் வழங்குகிறது.
ICICI பேங்கும், ஆக்சிஸ் பேங்கும் சமீபத்தில் தங்களுடைய FD வட்டி விகிதங்களை மாற்றியமைத்தது. ICICI பேங்கு ஜூலை 2 முதல் FD டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. புதிய வட்டி விகிதங்கள் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 7.20 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலும் இருக்கும்.
இதற்கிடையில், ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றியது. தற்போதய வட்டி விகிதங்கள் பொது வாடிக்கையாளர்கள்களுக்கு 3 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 முதல் 7.75 சதவீதம் வரையிலும் இருக்கும்.


Click it and Unblock the Notifications