IT நிறுவனங்கள் சொன்ன ஒரு குட் நியூஸ்.. காத்திருக்கும் நிறைய பணி வாய்ப்புகள்..!

ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக தற்போதைக்கு புதிய பணியமர்த்தல் இல்லை என்று கூறி வந்தன. ஆனால் உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்தாலும், தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பணியமர்த்தலை திட்டமிட்டு வருகின்றன.

இதுகுறித்து வெளியான பிசினஸ் இன்சைடர் செய்தியில், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதத்தில் 23.48% இருந்த வேலையின்மை விகிதமானது, ஜூன் மாதத்தில் 10.99% ஆக குறைந்துள்ளது. இது நாட்டில் தற்போது பணியமர்த்தல் அதிகரித்து வருவதற்கான ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.

இன்டெல் அறிவிப்பு

இன்டெல் அறிவிப்பு

இதற்கிடையில் சில முன்னணி நிறுவனங்கள் பணியமர்த்தலுக்கான அறிவிப்பினைக் கொடுத்துள்ளன. இது கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் இந்த பணியமர்த்தலானது உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட இன்டெல் நிறுவனம், Enterprise Operations General Manager & VP என்ற பணிக்கு ஆள்தேவை என்று அறிவித்துள்ளது.

எத்தனை ஆண்டுகள் அனுபவம் தேவை?

எத்தனை ஆண்டுகள் அனுபவம் தேவை?

ஐடி சம்பந்தமான துறையில் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு கல்வி தகுதி பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் அல்லது இதற்கு சரி சமமான கணினி அறிவியல் படிப்புகள் அல்லது இன்ஜினியரிங் கல்வித் தகுதி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Content Designer-க்கான வாய்ப்புகள்

Content Designer-க்கான வாய்ப்புகள்

குறைந்தபட்சம் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் வேண்டும். இதற்கு கல்வித் தகுதியாக தகுதியுடைய இளநிலை பட்டம் முடித்திருந்தால் போதுமானது. லைஃப்ரேரி சயின்ஸ், இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட், ஜெர்னலிசம், டெக்னிக்கல் ரைட்டிங்க், கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்படிகளில் ஒன்றை படித்திருக்க வேண்டும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட இந்த வேலைக்கு, இதனை எளிதாக புரிந்து கொண்டு பணிபுரியும் ஆட்கள் தேவை என்றும் இன்டெல் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்ஸில் டேட்டா சயிண்டிஸ்ட்- வாய்ப்புகள்

டிசிஎஸ்ஸில் டேட்டா சயிண்டிஸ்ட்- வாய்ப்புகள்

டேட்டா சயிண்டிஸ்ட்-க்கான வேலைவாய்ப்புக்கு பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8 -14 ஆண்டுகள் அனுபவம் தேவை என்று தெரிவித்துள்ளது இந்த நிறுவனம். ஒரு ஊழியர் ஒன்று அல்லது இரண்டு டொமைன்களை நிர்வகிக்கும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும் தெரிவித்துள்ளது. இது கம்யூனிகேஷன்ஸ் அல்லது மீடியா, சில்லறை பிரிவு, சிபிஜி, பிஎஃப்எஸ்ஐ அல்லது ஆட்டோமொபைல் துறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்ஸில் Data Strategy Consultant

டிசிஎஸ்ஸில் Data Strategy Consultant

டிசிஎஸ் நிறுவனம் Data Strategy Consultant வேலைக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. இது மும்பை, கொல்கத்தா பகுதிகளில் இந்த பணி வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனினும் இந்த பதவிக்கான கல்வித் தகுதி என்ன என்பதை இந்த நிறுவனம் அறிவிக்கவில்லை.

விப்ரோவில் என்ன வேலை?

விப்ரோவில் என்ன வேலை?

சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர்/டெக்னிக்கல் லீட், ஆர்கிடெக், கன்சல்டன்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை என தெரிவித்துள்ளது. இது பெங்களுரு மற்றும் நொய்டாவில் இந்த பணி வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக Strong NetIQ NAM domain knowledge இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கூகுள் பணியமர்த்தல் அறிவிப்பு?

கூகுள் பணியமர்த்தல் அறிவிப்பு?

கூகுள் நிறுவனம் Application Engineering Manager என்ற பதவிக்கு குறைந்தபட்சம் 12 வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஆட்கள் தேவை என்று அறிவித்துள்ளது. இதற்கு நமக்கு இளங்கலை பட்டம் படித்திருந்தால் போதுமானது, அது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஹைத்ராபாத்தினை அடிப்படையாக கொண்ட பணி வாய்ப்பாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+