இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை, இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் சம்பளம் உயர்வு என்பதை ஊழியர்கள் கண்களில் கூட காட்டவில்லை. இதே போல் வேரியபிள் பே, பதவி உயர்வு ஆகியவற்றிலும் பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் வேறு வேலைவாய்ப்புகளை தேடி துவங்கினால் புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைப்பதில் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்கும் ஐடி சேவை நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. சொல்லப்போனால் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் வெளியில் இருந்து ஊழியர்களை சேர்ப்பதை பெரிய அளவில் குறைத்துள்ளது, சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஸ்டாஃபிங் நிறுவனம் முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளது. ஐடி துறையில் காலியாக இருக்கும் பணியிடத்திலும், வேலைவாய்ப்புகளை தேடுவோருக்கு மத்தியில் பாலமாக இருப்பது இந்த ஸ்டாஃபிங் நிறுவனங்கள் தான்.
இந்திய ஐடி சேவை துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது, ஆனால் எப்போதும் இல்லாத வகையில் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் (GCC) என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய டெலிவரி சென்டர்களில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றது ஸ்டாஃபிங் நிறுவனங்கள்.
இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் பொருட்டு பென்சில் குவிந்துக்கிடக்கும் ஊழியர்கள் முதலில் பில்லிங்-கிற்குள் கொண்டு வருவதில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல் பென்சில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் வேறு தொழில்நுட்பத்திற்கு மாறும் வாய்ப்பு, ரீஸ்கில்லிங் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
இதனால் இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களின் பென்சில் இருக்கும் ஊழியர்களின் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனாலேயே தேர்வு செய்யப்பட்ட பல ஊழியர்களுக்கு இன்னும் Joining Date அளிக்கப்படாமல் உள்ளது, இதேபோல் பிரஷ்ஷர்கள் சேர்ப்பிலும் அதிகப்படியான காலதாமதம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வேறு வேலைவாய்ப்புகளுக்கு அதாவது வேறு நிறுவனத்திற்கு செல்ல விரும்பினால் தற்போது இருக்கும் ஓரே வாய்ப்பு GCC-கள் தான். ஆனால் இதற்கும் போட்டி அதிகமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். இந்த நிலையில் புதிய வேலைவாய்ப்பை தேடும் அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்ப்பில் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications