Fresher-களை தேடி தேடி வேலைக்கு எடுக்கும் IT நிறுவனங்கள்…ரெஸ்யூமோட ரெடியா இருங்க..!

சென்னை: 2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் 3 முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிதாக 8,400 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களையும் குறைத்து வந்தன. இந்த நிலையில் ஐடி துறையில் இருந்த மந்த நிலை நீங்கி தற்போது ஐடி நிறுவனங்கள் மீண்டும் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளன.

இதனை அடுத்து டிசிஎஸ் ,இன்போசிஸ் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில் கணிசமான ஊழியர்களை புதிதாக பணிக்கு எடுத்துள்ளன. 2024-ஆம் நிதியாண்டு முழுவதும் ஐடி நிறுவனங்கள் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து குறைத்து வந்தன. ஆனால் 2025 ஆம் நிதியாண்டில் நிலைமை சீரடைந்து இருக்கிறது. டிசிஎஸ் இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 2024-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 17,635 ஊழியர்களை குறைத்து இருந்தன.

 Fresher-களை தேடி தேடி வேலைக்கு எடுக்கும் IT நிறுவனங்கள்…ரெஸ்யூமோட ரெடியா இருங்க..!


இது 2024-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 21,186 என அதிகரித்து இருந்தது.
தற்போது இந்த போக்கு மாறி நிறுவனங்கள் ஆட்களை பணிக்கு அமர்த்தி வருகின்றன. அதன் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 8380 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் புதிதாக 5726 பேருக்கு வேலை வழங்கியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் புதிதாக 2456 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. விப்ரோ நிறுவனம் 978 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை தந்துள்ளது . ஆனால் ஹெச்சிஎல் நிறுவனம் மட்டும் தங்களுடைய ஊழியர்களில் 780 பெயரை நீக்கி உள்ளது. தற்போது ஐடி நிறுவனங்கள் ஃபிரஷர்களை கேம்பஸ் வாயிலாக பணிக்கு அமர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதால் வரும் நாட்களில் ஐடி துறையில் டிமாண்ட் அதிகரிக்கும் என இந்த துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். டிசிஎஸ் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் 40,000 ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் 22,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி விட்டது .

இன்போசிஸ் நிறுவனம் 15 முதல் 20 ,000 ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக கூறியுள்ளது. விப்ரோ நிறுவனமும் 12000 பேரை வேலைக்கு அமர்த்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 10000 பேருக்கு வேலை வழங்குவதாக கூறியிருந்தது. எனவே நடப்பு நிதியாண்டில் ஐடி பிரிவில் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் கேம்பஸ் மூலம் முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பை பெற உள்ளனர்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+