Work From Home வேண்டாம்.. ஏன்.. முன்னணி நிதி மேலாளர் சொல்வதை பாருங்க..!

கொரோனா காலத்தில் பல நிறுவன ஊழியர்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம், வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் பல லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையினை காப்பாற்றிக் கொள்ள சிறந்த ஆப்சனாக பார்க்கப்பட்டது.

எனினும் தற்போது பல நிறுவனங்களும் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணி புரியலாம் அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்ற பிளெக்ஸி ,முறையில் பணியாற்ற கூறி வருகின்றன.

இது நல்ல ஆப்சன்

இது நல்ல ஆப்சன்

பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியவும், எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்று கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த பிளெக்ஸி முறையை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இது ஒரு புறம் பல ஊழியர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு இந்த திட்டமானது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டது.

வளர்ச்சிக்கு வழிவகுப்பு

வளர்ச்சிக்கு வழிவகுப்பு

சில துறைகளில் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவது, தங்களது வேலையை தொடர்ந்து செய்ய, இந்த முறையானது பெரிய அளவில் கைகொடுத்து வருகின்றது. குறிப்பாக ஐடி துறையில் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது வழக்கத்தை விட, வீட்டிலிருந்து பணிபுரியும் போது இன்னும் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளதாக சில ஐடி நிறுவனங்கள் முன்னதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

முன்னேற்றம் தராது?

முன்னேற்றம் தராது?

அந்த அளவுக்கு ஊழியர்கள் மத்தியில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஆப்சன் என்பது நல்ல கைகொடுத்தது என்று சொல்லலாம். இது ஊழியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.

ஆனால் இப்படி நினைப்பவர்களுக்கு இது கவலையளிக்கும் விஷயம் என்றே கூறலாம். ஊழியர்கள் தற்போது தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வதன் மூலம் தங்களது முன்னேற்றத்தினை பணயம் வைக்கிறார்கள் என்று கூறுகின்றார் முன்னணி நிதி மேலாளார் கென் கிரிஃப்பின்.

மிகப்பெரிய தவறு

மிகப்பெரிய தவறு

இது குறிப்பாக ஐடி ஊழியர்கள் மத்தியில் சற்றே கவலையை ஏற்படுத்தி இருந்தாலும், ஏன் அவர்? இவ்வாறு கூறினார். என்ன காரணம் வாருங்கள் விரிவாக பார்க்கலாம். குறிப்பாக நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அதாவது கல்லூரி முடித்து இப்போது தான் வேலை செய்ய தொடங்கி இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

நிர்வாக அனுபவங்கள் கிடைக்காது

நிர்வாக அனுபவங்கள் கிடைக்காது

வீட்டில் இருந்து பணி செய்வது, உங்கள் வாழ்க்கையின் முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டிய நிர்வாக அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை பெறுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறுகிறார். மேலும் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது புதுமைகளை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில் போட்டித்தன்மை சமாளிக்க இயலாமல் போகலாம் என்கிறார்.

அனுபவங்கள் கிடைக்காது?

அனுபவங்கள் கிடைக்காது?

உண்மையில் அலுவலகத்தில் பணி செய்யும்போதும், ஊழியர்களிடம் பேசுவது போன்றவற்றில் கிடைக்கும் பல அனுபவங்கள் என்பது கிடைக்காமலேயே போகலாம்.
தற்போது பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிக்கு திரும்ப கூறி வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களும் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரியலாம் அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற ஆப்ஷனை கொடுத்து வருகின்றன.

பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது?

பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது?

ஊழியர்கள் எதிர்காலத்தில் மிகக் கடினமான காலகட்டங்களில், பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். இதனால் அவர்களது எதிர்காலத்தை அவர்களது வளர்ச்சியினை இது தடுக்கலாம் என்றும் கூறுகிறார். உண்மையில் இதுபோன்ற விஷயங்கள் யோசிக்க வேண்டியவை தான்.

தடுப்பூசி கட்டாயமில்லை

தடுப்பூசி கட்டாயமில்லை

இதற்கிடையில் கிரிஃப்ஃபின் தனது ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் அலுவலகத்திற்கு வர ஜூன் 2020 முதல் அனுமதித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்களை அலுவலகம் வரவேண்டுமானால் கட்டாயம், தடுப்பூசி போட கட்டாயப் படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும் தற்போது தனது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, வாரத்திற்கு ஐந்து நாட்கள் தங்களது அலுவலகப் பணியை செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இது தான் சரியான நேரம்

இது தான் சரியான நேரம்

ஆனால் அதேசமயம் அமெரிக்காவிலுள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களில், ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அமெரிக்க அரசுக்கும் ஊழியர்கள் அலுவலகம் திரும்ப இது சரியான நேரம், ஆக ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பும்படி கூற வேண்டும். ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+