இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கு CEO.. லிஸ்டில் மாஸ்காட்டும் ஒரேயொரு தமிழர்..!

பொதுவாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பதவிகளில் இருப்பவர்களுக்கு நிறுவனங்கள் கோடி கோடியாக ஊதியம் வழங்குகின்றன. அந்த வகையில் 2024 ஆம் நிதியாண்டில் அதிக ஊதியம் பெற்ற தனியார் நிறுவன தலைமை அதிகாரிகள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ப்ளூம்பெர்க் மற்றும் ஏஸ் செக்யூரிட்டீஸ் இணைந்து வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அதிகபட்சமாக விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக செயலாற்றி வந்த தியரி டெலபோர்ட்டே 2024 ஆம் நிதி ஆண்டில் 167 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று இருக்கிறார். ஓராண்டுக்கு முன்னர் அவரது ஊதியம் 83 கோடி ஆக தான் இருந்தது. ஆனால் ஓராண்டிலேயே இது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கு CEO.. லிஸ்டில் மாஸ்காட்டும் ஒரேயொரு தமிழர்..!

அதேபோல பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜீவ் ஜெயின் 2023 ஆம் நிதி ஆண்டில் 49 கோடி ஆண்டு ஊதியமாக பெற்ற நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 102 கோடி என அதிகரித்துள்ளது.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக பதவி ஏற்பவர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாமல் நிறுவனப் பங்குகளில் குறிப்பிட்ட விகிதம் ஒதுக்கீடு செய்யப்படும். அது மட்டும் இல்லை நிறுவன செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான ஊக்கத்தொகை, போனஸ் தொகை என பல வகைகளில் அவர்களுக்கு ஊதியம் என்பது ஒரு ஒட்டுமொத்த தொகுப்பாக வழங்கப்படுகிறது.

உதாரணமாக விப்ரோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலபோர்ட்டிற்கு ஊதியம் 24 கோடி ரூபாய் தான். ஆனால் அவருக்கு போனஸ், ஊக்கத்தொகை உள்ளிட்ட வழிகளிலேயே 42 கோடி கிடைத்திருக்கிறது. அது மட்டும் இன்றி அவருக்கு பிற நிதி பலன்களாக 93 கோடி கிடைக்கிறது.

இந்தியாவில் அதிக ஊதியம் பெற்ற மற்றொரு தலைமை செயல் அதிகாரி, ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பவன் முஞ்சால். இவர் 2024 ஆம் நிதியாண்டில் 109 கோடி ஊதியமாக பெற்றிருக்கிறார். இந்தியாவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு ஊதியம் பெறக்கூடிய தலைமை செயல் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினய் பிரகாஷ் 89 கோடி ரூபாயை ஊதியமாக பெறுகிறார். ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் தலைவரான சஜன் ஜிண்டால் 73 கோடி ஊதியமாக பெறுகிறார். அதே போல இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சலீல் பரேக் 67 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று இருக்கிறார்.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ், எல்&டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர் ராமன், ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேலான இயக்குனர் சுரேஷ் நாராயணன் ஆகியோரும் 30 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெறக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

நிஃப்டி 50 இண்டெக்ஸ் நிறுவனங்களை தாண்டி பிற நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளனர். உதாரணமாக சன் டிவி குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வரும் கலாநிதி மாறன் 2024 ஆம் ஆண்டில் ஊதியமாக 87 கோடி பெற்றிருக்கிறார் அவரது மனைவியும் சன் டிவி குழுமத்தின் முழு நேர இயக்குனருமாக செயல்பட்டு வரும் காவிரி கலாநிதி மாறனும் 87.5 கோடி ரூபாய் ஊதியத்தைப் பெற்று இருக்கிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+