மும்பையைச் சேர்ந்த பணியாளர் தேர்வு நிபுணர் ஜுனைத் கத்ரி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு தகவல், தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது, ரூ. 1 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கும் உயர் வருவாய் ஈட்டும் நிபுணர்கள் கூட, புதிய நிறுவனத்தில் சேர்வதற்காக தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஜினியனராக இருந்து பணியாளர் தேர்வு நிபுணராக மாறிய ஜுனைத், தான் சந்தித்த ஒரு நிகழ்வு பற்றி பகிர்ந்துள்ளார். ரூ.1.3 கோடி சம்பளம் வாங்கும் அனுபவம் வாய்ந்த ஒரு பணியாளரை தலைமைப் பொறியாளர் பதவிக்கான பணியில் அமர்த்த முடியவில்லை. ஏனெனில், அந்தப் பணிக்கான அதிகபட்ச சம்பள வரம்பு வெறும் ரூ. 96 லட்சம் மட்டுமே. இரண்டு தரப்பிலும் சமரசம் செய்ய முயற்சிகள் நடந்தும், உடன்பாடு எட்டப்படவில்லை.

ஒரு உயர் வருவாய் ஈட்டுபவர் ஏன் இவ்வளவு பெரிய சம்பள குறைப்பை ஏற்க தயாராக இருக்கிறார் என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜுனைத், தற்போது நிலவும் வேலைச் சந்தையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் தற்போதைய நிறுவனங்களில் நிலைமை ஆகியவற்றின் காரணமாக, குறைவான சம்பளத்தை ஏற்றுக்கொள்வது இப்போது சாதாரணமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
பணியாளர் தேர்வு நிபுணர் ஜுனைத் கத்ரியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் வந்துள்ளன. சிலர், ரூ. 90 லட்சத்திற்கு நான் கூட அந்த வேலையைச் செய்யத் தயார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டனர். வேறு சிலர், ஆட்சேர்ப்பு கடினமானதாக இருப்பதற்கு காரணம், இரு தரப்பினரும் சரியான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் சம்பளக் கணக்கு ஒத்துழைக்கவில்லை என்று பதிவிட்டுள்ள்னர்.
இன்றைய சந்தையில், ரிமோட் வேலை, சிறந்த தொழில்நுட்ப சூழல் மற்றும் வேலை - வாழ்க்கை சமநிலை போன்ற கூடுதல் காரணங்கள் மட்டுமே சம்பள குறைப்பை ஏற்க ஒருவரை தூண்டும் என்றும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜுனைத், வேலை இல்லாமல் இருப்பதைவிட, வேலை இருப்பது நல்லது என்ற யதார்த்தமான கருத்தைக் கூறி, வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய கடினமான சூழலை எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, இந்த விவாதத்திற்குப் பின்னால், தொழில்நுட்பத் துறை பற்றிய ஒரு முக்கியமான உண்மை வெளிவந்துள்ளது. ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தரவுகள், சாஃப்ட்வேர் வேலைகளுக்கான தேவை குறைந்து வருவதை இதை காட்டுகின்றன. டிம்லீஸ் (Team Lease) நிறுவனத்தின் தகவலின்படி, ஐடி சேவை நிறுவனங்கள் ஜூலை முதல் டிசம்பர் காலகட்டத்திற்கான தங்கள் ஆட்சேர்ப்பு இலக்கை குறைத்துள்ளன.
அதாவது, 3 முதல் 5% இல் இருந்து வெறும் 1 முதல் 3% ஆக குறைத்துள்ளன. அதேபோல், அடெக்கோ இந்தியா (Adecco India) நிறுவனம், உலகளாவிய தேவை குறைவு மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக 2025ஆம் ஆண்டின் பாதியில் ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு 7% குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால், தொழில்நுட்பத் துறையில் ஒருவர் அதிக சம்பளத்திற்கு வேறு நிறுவனத்துக்கு மாறும் பழைய நிலை மாறி, தற்போது நிலையான வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே தான், ஊதியம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இப்போது அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications