சென்னை: இந்தியாவில் அரசு வேலைகள் ஒரு நிலையான வேலையாகக் கருதப்படுகிறது. இன்றெல்லாம் இளைய தலைமுறையினர், அரசு வேலைகளையே அதிகம் விரும்புகின்றனர். காரணம் என்னவென்றால், பல தனியார் நிறுவனங்களும், தங்களுடைய லாபத்தில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் உடனடியாகப் பணி நீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, அரசு வேலைகள் நிரந்தரமானதாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்தப் பதிவில் அதிக சம்பளம் தரும் அரசாங்க வேலைகளைப் பற்றிப் பார்ப்போம்
இந்திய ஆட்சிப் பணி (IAS): இந்தப் பதவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் 25 வயது 21 வயதுடைய நபர்கள் மட்டுமே தேர்வு எழுதத் தகுதியுடையவர்கள். IAS பதவிக்கு ரூ.56,100 தொடக்க சம்பளம். அதன் பின், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,31,249 ஆக சம்பளம் உயரும்.

ரிசர்வ் பேங்க் கிரேடு பி அதிகாரிகள்: இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு பி அதிகாரிகளுக்கு, சுமார் ரூ.1,08,404 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் NDA வேலைகள்: சிலருக்கு கடற்படை, இராணுவம், விமானப்படை போன்ற வேலைகளில் சேர ஆர்வம் இருக்கும். இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் NDA வேலைகளுக்கு மாதம் ரூ.56,100 சம்பளம் கிடைக்கும்.
ISRO, DRDO விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் பதவிகள்: ISRO மற்றும் DRDOஇல் உள்ள இன்ஜினியரிங் சார்ந்த பதவிகளுக்கு, மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்திய வனத்துறை வேலை: இந்திய வனத்துறை வேலை, ரிஸ்க் எடுக்க விரும்பும் நபர்களுக்கெல்லாம் பிடித்த வேலை. இந்த வேலையில் சேர்பவருக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ. 2,25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
SSC CGL வேலைகள்: SSC CGL தேர்வு எழுதி, அரசுப் பணிகளில் சேரும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 25,500 முதல் ரூ. 1,51,100 வரை வழங்கப்படுகிறது.
உதவிப் பேராசிரியர் வேலைகள்: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, மாதம் ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவர்கள்: அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மாதம் ரூ. 52,000 முதல் ரூ. 53,000 வரை, அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து பெறுகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications