என்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..!

டெல்லி: நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதாரம் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். அதே சமயம் கொரோனாவின் காரணமாக லாக்டவுனும் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முறை சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடி சிஐஐ கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்? தொழில் துறையினருக்கு ஏதேனும் அறிவிப்புகள் உண்டா என்ற பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

இதற்கிடையில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் (CII) 125 ஆவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது.

பொருளாதாரம் பாதிப்பு

பொருளாதாரம் பாதிப்பு

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதுவும் அன்லாக் 1க்கு பிறகு பொருளாதாரம் குறித்த முதல் உரை இதுவேயாகும். கொரோனா வைரஸ் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான பாதையில் உள்ளது.

வலுபடுத்த வேண்டும்

வலுபடுத்த வேண்டும்

அதன் ஒரு பகுதியாக ஐந்தாம் கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில் நிறுவனங்களில் பணிகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

விரைவில் பொருளாதாரம் மீண்டு வரும்

விரைவில் பொருளாதாரம் மீண்டு வரும்

இப்படி ஒரு நிலையில் வளர்ச்சியைத் மீண்டும் பெறுதல் என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டு எடுப்போம். விவசாயம், தொழில் செய்வோர், தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

மேலும் கொரோனா பிரச்சனைக்கும் மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது எனவும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தினை மீட்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளையும் முடிவுகளையும் எடுத்து வருகிறது. அதோடு நாட்டிற்கு நீண்ட காலம் உதவக்கூடிய முடிவுகளையும் எடுத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதலீடு செய்ய வேண்டும்

முதலீடு செய்ய வேண்டும்

மேலும் உலகம் நம்பகமான கூட்டாளரை தேடி வருகிறது. இந்தியாவில் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் திறன் உள்ளது. இன்று உலகம் முழுவதும் இந்தியா உருவாக்கிய நம்பிக்கையிலிருந்து பயனடைய வேண்டும். இப்போது உலகளாவிய விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் முன், உள்ளூரில் முதலில் வலுப்படுத்த நாம் அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

இது 5ம் தேவை

இது 5ம் தேவை

ஆக இந்த தீவிர நடவடிக்கையில் கொரோனாவுக்கு பிந்தைய நடவடிக்கையில், சிஐஐயும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மேலும் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல ஐந்து முக்கிய விஷயங்கள் தேவை. அது முதலில், நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் புதுமை ஆகிய இவை அனைத்தும் முக்கியமானவை.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

சுரங்கத் துறை, எரிசக்தி துறை அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பம் என எந்த துறையானலும், அதில் ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் இருக்கும் என்றும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார். எங்களை பொறுத்தவரை சீர்திருத்தங்களை கொண்டு வர என்பது தைரியமான முடிவுகளை எடுப்போம்.

எம்எஸ்எம்இக்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்க முயற்சி

எம்எஸ்எம்இக்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்க முயற்சி

மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகள நாங்கள் அதிகரிக்க முயற்சிக்கிறோம். அரசின் நிலைமையை புரிந்துள்ள கொள்ள, உலகளாவிய நிலையினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா பொருளாதாரத்துக்கு எம்எஸ்இக்களின் பங்கு என்ன என்பதை நாம் அறிவோம். ஆக அவர்களை அரசு ஊக்குவித்து வருகிறது.

வளர்ச்சி கடினமானது அல்ல

வளர்ச்சி கடினமானது அல்ல

வளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானது அல்ல, நீங்கள் அனைவரும் தொழில்துறை அலகுகள். ஒரு தெளிவான பாதையினை கொண்டு இருக்கிறீர்கள். மேலும் தற்போது காலத்தின் தேவை என்பது மேட் இன் இந்தியா தயாரிப்புகள் தான். அவை உலகத்திற்காக தயாரிக்கப்பட்டவை. மேலும் இறக்குமதியை குறைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்தியாவின் தனியார் துறை என்பது இந்தியாவின் வளர்ச்சியினை உறுதி செய்வதில் ஒரு வகை கூட்டாளராகும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+