அமெரிக்க பொருளாதாரம் குறித்து தினமும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கும் வேளையில், 2024 ஆம் ஆண்டு பொது தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக ரிபப்ளிக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமி பலருடைய கவணத்தை ஈரத்துள்ளார்.
இந்த நிலையில் விவேக் ராமசாமி தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள பணியாளரை தேடுகிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இது உண்மை என தெரிய வந்துள்ளது. வருங்கால ஜனாதிபதி வீட்டில் பணியாற்றுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

விவேக் ராமசாமி EstateJobs.com என்ற வேலைவாய்ப்பு தளத்தில் இந்த வேலை குறித்த அறிவிப்பை பட்டியலிட்டுள்ளார் என்பதை பிசினஸ் இன்சைடர் பத்திரிக்கை உறுதிப்படுத்தியது. பயோடெக் தொழில்முனைவோர் மற்றும் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விவேக் ராமசாமி வீட்டில் அவருடைய இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும் பணிக்கு சுமார் 100,000 டாலர் அதாவது தோராயமாக ரூ.83 லட்சம் சம்பளம் வழங்குவதாக அவருடைய பதவில் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஆசைப்படும் குடியரசுக் கட்சி சார்பாக போட்டிப்போட்டு வரும் விவேக் ராமசாமி சமீபகாலமாக தீவிர பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார், சமீபத்தில் பாலக்காடு தமிழ் பேசி அமெரிக்காவில் இருக்கும் தமிழ் மக்களையும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
இதில் எஸ்டேட் ஜாப் இணையதம் என்பது, தங்கள் வீட்டுப் பணியாளர்களை அதிகரிக்க விரும்பும் வசதி படைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளமாகும். இதில் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் மட்டுமே இணையும் தளம், இதில் தான் விவேக் ராமசாமி 83 லட்சம் ரூபாய் சம்பளத்தில் NANNY-ஐ தேடி வருகிறார்.
விவேக் ராமசாமி-யின் இரண்டு குழந்தைகளை முழுநேரமும் பார்த்துக்கொள்ளும் NANNY என்னும் ஆயா வேலைக்கு முன் அனுபவம் உள்ள ஒருவரை தேடி வருகிறார். மேலும் தேர்வு செய்யும் நபர் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் நபர் மாற்று காலக்கட்டத்தில் பணியாற்ற வேண்டும், அதாவது ஒரு வாரம் வேலை செய்து ஒரு வாரம் விடுப்பு எடுக்கும் வகையில் இருக்கும். சுமார் 26 வாரங்கள் வேலை செய்தாலே போதும், இதற்கு விவேக் ராமசாமி சுமார் ரூ.83 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக உள்ளார்.
விவேக் ராமசாமிக்கு மூன்று மற்றும் ஒரு வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் கிட்டத்தட்ட வாரந்தோறும் தனியார் விமானப் பயணத்தின் மூலம் பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. வாராந்திர குடும்பப் பயணங்களில் தனியார் விமானங்கள் வழியாக செல்ல வேண்டியிருக்கும்.
மேலும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு சைவ உணவுகளில் கவனம் செலுத்தி, உணவு தயாரிப்பு மற்றும் பழக்கவழக்கங்களுக்கு உதவ வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. விவேக் ராமசாமி-யின் நிகர சொத்து மதிப்பு ஆகஸ்ட் 2023 இல் $950 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது.
உலகம் முழுவதும் வொயிட் காலர் வேலைவாய்ப்பு உருவாக்குவதை முக்கியமாக இலக்காக கொண்டு இருந்தாலும், அனைத்து நாடுகளிலும் அடிப்படை வர்த்தகம், வாழ்க்கையை மேம்படுத்துவது ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் இருப்பவர்கள் தான்.
கடந்த சில வருடங்களாக தனியார் நிறுவனங்கள் முதல் மத்திய மாநில அரசு வரையில் ப்ளூகாலர் வேலைவாய்ப்புகளில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான திட்டங்களையும், நன்மைகளையும் அளிக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரூ.2000 செய்ய போகும் மேஜிக்!! பெண்கள் நினைச்சா எதுவும் நடக்கும்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications