ஆர்சலர் மிட்டல் சாம்ராஜ்ஜியத்துடன் இன்போசிஸ் புதிய கூட்டணி.. வாவ்..!

உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்சலர் மிட்டல் குழுமத்தில் சில வாரங்களுக்கு முன்பு மிகப்பெரிய நிர்வாக மாற்றம் நிகழ்ந்த நிலையில், இக்குழுமம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல துவங்கியுள்ளது.

ஆர்சலர் மிட்டல் குழுமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் முக்கிய அங்கமாக இருக்கும் என ஆதித்யா மிட்டல் தலைமையிலான நிர்வாகக் குழும நம்புகிறது. இதற்காக உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்சலர் மிட்டல், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ஐ தேர்வு செய்துள்ளது.

 இன்போசிஸ்-க்கு ஜாக்பாட்

இன்போசிஸ்-க்கு ஜாக்பாட்

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் மிகப்பெரிய வர்த்தகத்தைச் செய்து வரும் இன்போசிஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்சலர் மிட்டல் நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 ஆர்சலர் மிட்டல் உடன் ஒப்பந்தம்

ஆர்சலர் மிட்டல் உடன் ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் மூலம் ஆர்சலர் மிட்டல் ஐரோப்பிய நிறுவனத்திற்குத் தேவையான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், அடுத்த தலைமை நிர்வாகம், வர்த்தக மேலாண்மை சேவைகளை இன்போசிஸ் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆர்சலர் மிட்டல் தனது வர்த்தகத்தை மிகவும் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகளவில் மேம்படுத்த முடியும்.

 ஐரோப்பிய வர்த்தகம்

ஐரோப்பிய வர்த்தகம்

ஆர்சலர் மிட்டல் நிறுவனத்துடனான கூட்டணி இன்போசிஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் உலகில் பல பகுதிகளில் இருக்கும் ஆர்சலர் மிட்டல்-ன் வர்த்தகத்தை எளிதாக இணைக்கவும், சேவை அளிக்கவும் முடியும். மேலும் இன்போசிஸ் ஆர்சலர் மிட்டல் ஐரோப்பிய வர்த்தகத்தின் Business Center of Excellence (BCoE) தளத்தின் தனது அதிநவீன மேம்பட்ட Business Process Management (BPM) சேவை நிறுவ உள்ளது.

 2020 லாக்டவுன்

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன் அறிவிப்புக்குப் பின் உலகில் பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் சேவைகளையும் புதிய தொழில்நுட்பத்தை வர்த்தகத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை குறைவது மட்டும் அல்லாமல் உற்பத்தி, சேவை திறனும் பெரிய அளவில் மேம்படுகிறது என்பதே பெரு நிறுவனங்களின் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

 இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் உருவாகியுள்ள இந்தத் திடீர் தேவையை இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பூர்த்திச் செய்து வருகிறது. குறிப்பாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் இருந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகங்களைப் பெற்று வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+