இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, அதன் ஆண்டு வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, நாட்டின் GDP-க்கு முக்கிய பங்களிப்பாளராக IT துறை உள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்படி, 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் சுமார் 7% GDP வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. கார்ட்னர் அறிக்கை, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை 2024-ஆம் ஆண்டில் 124.6 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டை விட 10.7% அதிகமாகும்.
இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. கூடுதலாக, இந்தியாவின் தொழில்நுட்பத் துறை 2024-ஆம் நிதியாண்டில் $254 பில்லியனை எட்டும் என்று நாஸ்காம் கணித்துள்ளது. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட $9 பில்லியன் அதிகமாகும்.

இந்தியாவில் தற்போது IT துறை பல்வேறு பிரிவுகளிலும் தனது வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
மார்க்கெட் கேப் என்றால் என்ன?: மார்க்கெட் கேப் என்பது சந்தை மூலதனம். அதாவது ஒரு நிறுவனத்தின் நிலுவையில் உள்ள பங்குகளின் மொத்த டாலர் மதிப்பைக் குறிக்கிறது. உதாரணமாக, 10 மில்லியன் பங்குகளைக் கொண்ட ஒரு நிறுவனம் ஒவ்வொறு பங்கையும் ரூ.100க்கு விற்றால், அதன் சந்தை மூலதனம் ரூ.1 பில்லியன் ஆகும்.
மார்க்கெட் கேப் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள்:
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்: இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவில் உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக TCS உள்ளது. இங்கு IT சேவைகள், ஆலோசனை மற்றும் வணிக தீர்வுகள் என பல சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் தொலைத்தொடர்பு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப் 15.44 கோடியாகும். இங்கு 614,795 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்ஃபோசிஸ்: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரு, கர்நாடகா மற்றும் இந்தியாவில் உள்ளது. ஜூலை 2-ஆம் தேதி 1981-ஆம் ஆண்டு இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இன்ஃபோசிஸ் டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆலோசனையில் உலகளாவில் முன்னணியில் உள்ளது. புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப் 7.77 கோடியாகும். இங்கு 317,240 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
HCL டெக்னாலஜிஸ்: HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமையகம் நோய்டா, உத்தர் பிரதேசம், இந்தியா ஆகிய இடங்களில் உள்ளது. இந்த நிறுவனம் நவம்பர் 12, 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் மென்பொருள் சேவைகளில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4.87 கோடியாகும். இங்கு 219,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
விப்ரோ லிமிடெட்: விப்ரோ நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரு, கர்நாடகா மற்றும் இந்தியாவில் உள்ளது. இந்த நிறுவனம் டிசம்பர் 29, 1945-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, விப்ரோ ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனமாக உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.82 கோடியாகும். இங்கு 234,054 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
LTI மைண்ட்ரீ லிமிடெட்: LTI மைண்ட்ரீ லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூர், கர்நாடகா மற்றும் இந்தியாவில் உள்ளது. டிசம்பர் 23, 1996-ஆம் ஆண்டு இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.85 கோடி. இங்கு 81,650 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.


Click it and Unblock the Notifications