ஹைதராபாத்-க்கு படையெடுக்கும் டெக் நிறுவனங்கள்.. அப்போ சென்னை..?!

ஹைதராபாத்: சர்வதேச டெக் நிறுவனங்கள் பலவும் தற்போது தங்களது கவனத்தை ஹைதராபாத் பக்கம் திருப்பியுள்ளன. குறிப்பாக நான்கு முக்கியமான நிறுவனங்கள் ஹைதராபாத்தில் 8.7 லட்சம் சதுர அடி அளவிலான நிலத்தை அண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்து இருப்பது ரியல் எஸ்டேட் தரவு மூலம் தெரிய வந்துள்ளது.

Propstack என்ற ரியல் எஸ்டேட் தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில், குவால்காம் இந்தியா (Qualcomm India), எல்டிஐ மைண்ட்ரீ (LTI Mindtree) , ஐபிஎம் இந்தியா (IBM India) மற்றும் எஸ்என்பி கேபிட்டல் ஐகியூ இந்தியா பிரைவேட் லிமிடெட் (S&P Capital IQ India Pvt Ltd) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஹைதராபாத்தில் மிகப்பெரிய அளவிலான இடத்தை அதிக தொகை கொடுத்து லீசுக்கு எடுத்துள்ளன.

ஹைதராபாத்-க்கு படையெடுக்கும் டெக் நிறுவனங்கள்.. அப்போ சென்னை..?!

சிப் உற்பத்தியாளரான குவால்காம் இந்தியா நிறுவனம் தி ஸ்கைவியூ என்ற வணிக கட்டிடத்தில் 4.14 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தை லீசுக்கு எடுத்துள்ளது. RMZ நிறுவனத்திடம் இருந்து இந்த நிறுவனம் இடத்தை லீசுக்கு எடுத்துள்ளது. ஹைடெக் சிட்டியில் தான் இந்த இடமானது அமைந்திருக்கிறது. இங்கே ஒரு சதுர அடிக்கு ஒரு மாதத்திற்கான 76 ரூபாய் வாடகை.

இதன்படி குவால்காம் நிறுவனம் 5 தளங்களை 5 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்து இருப்பதாகவும் இதற்காக 3.15 கோடி செலுத்தி இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்காக 16.4 கோடி ரூபாய் டெபாசிட்டாக செலுத்தப்பட்டுள்ளதாம். இரண்டாவது ஆண்டில் 7 சதவீதம் என்ற அளவில் இந்த தொகை உயர்த்தப்படுகிறது.

எஸ்என்பி கேப்பிட்டல் இதே கட்டடத்தில் 2.41 லட்சம் சதுர அடி இடத்தையும். எல்டிஐ மைண்ட்ரீ 1.09 லட்சம் சதுர அடி இடத்தையும் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளன.

அடுத்ததாக மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், Midas Projects நிறுவனத்திடம் இருந்து அலுவலகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது . கிட்டத்தட்ட 1. 06 லட்சம் சதுர அடி இடத்தை ஐபிஎம் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திவ்யஸ்ரீ ஓரியான் என்ற கட்டிடத்தில் இரண்டு தளங்களை முழுவதுமாக ஐபிஎம் நிறுவனம் லீசுக்கு எடுத்துள்ளது. குத்தகை தொகையானது ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயரும் என கூறப்பட்டுள்ளது.

இங்கே ஒரு மாதத்திற்கு ஒரு சதுர அடிக்கு 66 ரூபாய் என்ற அளவில் குத்தகை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மட்டும் ஐபிஎம் நிறுவனம் இந்த 1.06 லட்சம் சதுர அடி இடத்திற்கு 70 . 23 லட்சம் ரூபாயை குத்தகை தொகையாக செலுத்தும். ஹைதராபாத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐடி நிறுவனங்களின் புகலிடமாக ஹைதராபாத் மாறி வருகிறது. எவ்வளவு தொகையாக இருந்தாலும் இங்கே தங்களது நிறுவன அலுவலகங்களை அமைப்பதற்கு பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.

ஹைதராபாத் நகரில் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக மேற்கு ஹைதராபாத்தில் பல்வேறு நிறுவனங்களும் அலுவலகங்களை அமைப்பதற்கு ஆர்வம் காட்டுவதால் அங்கு மட்டும் சொத்துக்களின் மதிப்பு 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+