சென்னை: இந்திய வங்கிகளும்,நிதி நிறுவனங்களும் சமீபகாலமாக டாப் அப் ஹோம் லோன் (Home loan top-up) வழங்குவது அதிகரித்து வரும் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தெரிவித்தார். மேலும் அவர் சில நிதி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்திய வங்கிகளில் டாப் அப் ஹோம் லோன் வேகமாக வளர்ந்து வருகின்றன, இதேவேளையில் சில நிறுவனங்கள் டாப் அப் ஹோம் லோன் மற்றும் தங்கக் கடன் தொடர்பான விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை. எனவை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளில் டாப் அப் ஹோம் லோன் வாங்குவோர் முதலில் வீட்டை மேம்படுத்தவே வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கடன்கள், திருமணம், விடுமுறை மற்றும் தங்களுடைய சொந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது போன்ற மாற்றுப்பட்ட மற்றும் பயனற்ற நோக்கங்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாகத் தங்கக் கடன் போன்ற பிற பிணையக் கடன்களுக்கு டாப் அப் லோன் வழங்கப்படுவதும், டாப் அப் ஹோம் லோன் பெறுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சி கணிசமான அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
எனவே வங்கிகள் இத்தகைய பிரிவு கடன்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்து, கடன் கொடுக்கப்படும் தொகை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த 2 கடன்களில் சூழ்ந்துள்ள அபாயங்களைக் குறைக்க, ஆல்காரிதம் அடிப்படையிலான கடன் மாதிரிகளில் கடுமையான தணிக்கை நடத்த வங்கிகளுக்கு ஆர்பிஐ சமீபத்தில் அறிவுறுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு ஆர்பிஐ கன்ஸ்யூமர் லோன்கள் அதிகரித்துள்ளது குறித்த எச்சரிக்கையை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆல்காரிதம் அடிப்படையிலான கடன் மாதிரிகளில் பணப்புழக்கம் முதல் வீட்டு முகவரி வரை பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தும் ஆய்வு செய்து, உடனடியாக கடனுக்கான ஒப்புதல்களை வழங்குகிறது. இருப்பினும், இந்த மாதிரிகள் அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்தச் சரியாகச் சோதனை செய்யப்பட்டுச் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications